நேற்று பாதுகாப்புக் குற்ற(சிறப்பு நடவடிக்கை)ச் சட்டத்தின்கீழ்(சோஸ்மா) மீண்டும் கைது செய்யப்பட்ட முன்னாள் அம்னோ உறுப்பினர் கைருடின் அபு ஹசான் பல மாதங்கள் சிறையில் பூட்டி வைக்கப்படும் சாத்தியம் இருப்பதாக மனித உரிமை வழக்குரைஞர் ஷியாரெட்ஸான் ஜொஹான் கூறினார்.
அது எப்படி என்றால், சோஸ்மாவின்கீழ் பத்து கவான் அம்னோ தொகுதியின் துணைத் தலைவரான கைருடின் 29 நாள்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்படலாம்.
அதன் பின்னர், அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டால் வழக்கு முடியும்வரை அவர், ஜாமின் இல்லையென்பதால், சிறையில்தான் இருக்க வேண்டும். வழக்கு முடிய பல மாதங்களாகலாம்.
“ஆக, அதிகாரிகள் இந்த வழியில் செயல்படுவார்களானால் கைருடின் நீண்ட காலம் உள்ளே இருக்க வேண்டிவரும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இனாமான சாப்பாடு. இன்பமான கவலை இல்லாத வாழ்க்கை. கொடுத்து வைத்தவரப்பா கைதி கைருடின்! அன்னமிட்ட கையை கடித்தால், இது ஆட்டிவைக்கும் கை என்று அமீனோ கட்சியிடம் இன்னும் பல மலாய்க்காரர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கு. பேசாம நன்கொடை பணத்தில் கிடைத்ததை வாங்கி ஏப்பம் விட்டோமோ என்று போகாமல் வளர்த்த கிடாவே மார்பில் பாய்ந்தால் அமீநோவிடம் இருந்து கிடைக்கும் பரிசு இதுதான். அவ்வளவு உத்தமமான கட்சி உங்க கட்சி.
அதிகபடியான காய்ச்சல் காரணமா இவர் மருத்துவமனையில் சேர்கப்பட்டுள்ளாராம்! அப்ப எப்ப பாடை கட்டுவதாக உத்தேசம்?