நஜிப் ஐநா கூட்டத்தில் கலந்துகொள்ள நியூ யோர்க் சென்றார்

unமலேசியப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், ஐநா  பொதுப்  பேரவையின்  70வது  கூட்டத்தொடரில்  கலந்துகொள்வதற்காக  நேற்று  நியூ யோர்க்  சென்றடைந்தார்.

நஜிப்பையும்  அவரின்  துணைவியார் ரோஸ்மா  மன்சூரையும்   வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமான்,  அமெரிக்காவுக்கான   மலேசியத்  தூதர்  ஆவாங்  அடேக்  ஹுசேன், ஐநாவில்  மலேசியாவின்  நிரந்தரப்  பேராளர்  ரம்லான்  இப்ராகிம்  முதலானோர்  வரவேற்றனர்.

ஐநாவில் பல  உயர்நிலைக்  கூட்டங்களில்  கலந்து  கொள்ளும்  நஜிப்  அக்டோபர்  முதல்  நாள்  பேரவையில்  உரையாற்றுவார்.

மலேசியா, இப்போது   ஐநா  பாதுகாப்பு  மன்றத்தில்  நிரந்தமற்ற  உறுப்பினராக  இடம்பெற்று முக்கிய  பணியாற்றி  வருகிறது.

நஜிப்,  செப்டம்பர்  28-இல்,  அமெரிக்க  அதிபர் பராக்  ஒபாமா  தலைமையில்  நடைபெறும் ஐநா  அமைதிகாக்கும்  பணி  மீதான உச்சநிலை  மாநாட்டிலும்  கலந்து  கொள்வார்.