ஜமால்: நாளைய பெட்டாலிங் ஸ்திரிட் பேரணிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை

jamal yuபெட்டாலிங்  ஸ்திரிட்டில்  கலவரம்  வெடிக்கலாம்  என்று  இரண்டு  நாள்களுக்குமுன்  எச்சரித்த   சுங்கை  புசார்   அம்னோ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  அப்பேரணிக்கும்  தமக்கும்  தொடர்பில்லை  என்கிறார்.

“திட்டமிடப்பட்டுள்ள  அப்பேரணியில்  நான்  சம்பந்தப்படவில்லை  என்பதை  வலியுறுத்த  விரும்புகிறேன்.

“அப்படி  ஓர்  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றால்  கலவரம்  வெடிக்கலாம்  என்ற  என்னுடைய  கவலையைத்தான்  எடுத்துரைத்தேன்”,  என்றாரவர்.

குழப்பத்துக்கு  மாற்று  ஊடகங்கள்தாம்  காரணாமாம். அவை  தம்  பேச்சின்  ஒரு  பகுதியை மட்டுமே  அறிவித்ததுதான்  குழப்பத்தை  ஏற்படுத்தி  விட்டதாக அவர்  சொன்னார்.

“நான்  புதன்கிழமை  அப்படிப்  பேசியது  மக்களை  மிரட்டுவதற்காகவோ  பயமுறுத்தவோ  அல்ல  என்பதைத்  தெளிவுபடுத்த  விரும்புகிறேன்.

“உள்நாட்டு  வர்த்தக,  கூட்டுறவு, பயனீட்டாளர்  விவகார  அமைச்சு  போலிப்  பொருள்கள்  விற்பனை  செய்யும்  வணிகர்கள்மீது  நடவடிக்கை  எடுக்கத்  தவறினால் இப்படி  நடக்கலாம்  என்ற  என்னுடைய  கவலையைத்தான்  வெளிப்படுத்தினேன்.  வேறொன்றுமில்லை”.

மலேசியாகினி தொடர்புகொண்டபோது  நாளைய  பேரணியில்  கலந்துகொள்ளப்  போவதில்லை  என  ஜமால்  கூறினார்.