அம்னோ பொதுப்பேரவையில் இனவாதப் பேச்சைத் தவிர்ப்பீர்: மசீச கோரிக்கை

agmசெப்டம்பர்  16  சிகப்புச்  சட்டைப்  பேரணியைத்  தொடர்ந்து  டிசம்பரில்  நடைபெறும்  அம்னோ  பேராளர்  கூட்டத்தில் (ஏஜிஎம்) உறுப்பினர்கள்  “ஆர்வமிகுதியினால்  இனவாதம்  பேச”த்  தொடங்கி விடக்கூடாது.

“அம்னோ பொதுப்பேரவையில் அம்னோ  சகாக்கள்  அரசியல்  செல்வாக்கு  பெறும்  ஆர்வத்தில் இனவாதம்  பேசக்  கூடாது  என்பதை  வலியுறுத்த  விரும்புகிறேன்”, என  மசீச  செனட்டர்  சாய்  கிம்  சென்  ஓர்  அறிக்கையில்  கூறினார்

அனைவரும் இன  இணக்கத்தைக் காக்க  வேண்டும்  என்றாரவர்.

சுங்கை  புசார்  அம்னோ  தலைவர்  ஜமால் முகம்மட்  யூனுஸ், பெட்டாலிங்  ஸ்திரிட்  கடைகளில்  50விழுக்காடு  மலாய்க்காரர்களுக்கு  ஒதுக்கப்பட  வேண்டும்  என்று  கோரிக்கை விடுத்திருப்பதை  சாய்  சுட்டிக்காட்டினார்.

“அவப்பேறாக,  அம்னோ  கட்சியினர்  எவரும்  அவரைக்  கண்டிக்கவில்லை.  மக்களுக்கு  நம்பிக்கையூட்டும்  வகையில்  எந்த  நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை”.

இதனால்  எதிர்வரும்  அம்னோ  ஏஜிஎம்-மில்  பேராளர்கள்  மறுபடியும்  இனவாதம்  பேசத்  தொடங்குவார்களோ  என்று  மக்கள்  கவலை  கொண்டிருப்பதாக  மசீச விளம்பரப்  பிரிவுத்  தலைவருமான  சாய்  கூறினார்.