காலஞ்சென்ற அந்தோனி கெவின் மொராயிஸின் இறப்புக்கான காரணத்தை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள் அவரின் உறவினர்கள். அதனால்தான் அவர்கள் அவரின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுப்பதாக போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
கோலாலும்பூர் பொது மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறை அதை உறுதிப்படுத்த வேண்டும் என அவரின் குடும்ப உறுப்பினர்கள் விரும்புவதாக போலீஸ் படைத் துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் கூறினார்.
“டிஎன்ஏ சோதனை முடிவுகள் சில நாள்களுக்கு முன்பே பெறப்பட்டன. அவை இறந்து போனவருக்கும் அவரின் குடும்பதாருக்குமுள்ள உயிரியல் தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன”, என்று நூர் ஓர் அறிக்கையில் கூறினார்.
-பெர்னாமா
உறவினர்கள் மற்றும் இல்லை அணைத்து மலேசியர்களும் எதிர் பார்க்கிறோம்
ஒரு வேளை அல்துன்யா கொலைகாரர்களுக்குத் தெரியுமோ?
ஐஜிபி, இது பேய் பிசாசுகளின் வேலையாக கூட இருக்கலாம் என்று,சொன்னாலும் சொல்லுவார்.(வெட்டிச்சம்பள வாசிகள்)
நான் சொல்கிறேன் cincinum scorpeanum செய்த வேலையப்பா அது