சொய் லெக்: ஜமாலைக் கைது செய்யச் சொல்லி மசீச தலைவர் வலியுறுத்தியிருக்க வேண்டும்

chuaமசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய், அமைச்சரவைக்  கூட்டத்தில்  கலந்துகொண்டபோது  சுங்கை  புசார்  அம்னோ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுசைக்  கைது  செய்ய  வேண்டும்  என்பதை  வலியுறுத்தி  இருக்க  வேண்டும்  என  முன்னாள்  மசீச  தலைவர்  டாக்டர்  சுவா  சொய்  லெக்  கூறினார்.

“இன்று  வெள்ளிக்கிழமை. புதன்கிழமை  நடந்த  அமைச்சரவைக்  கூட்டம்தான்  அதற்கான  சரியான  நேரம். ஜமால்  தேச  நிந்ந்தனைச்  சட்டத்துக்கு  எதிராக  நடந்து  கொண்டிருக்கிறார்.  அதனால் அவரைக்  கைது  செய்ய  வேண்டும்  என்பதை    வலியுறுத்தி  இருக்க  வேண்டும்”, என  முன்னாள்  சுகாதார  அமைச்சரான  சுவா  குறிப்பிட்டார்.

“அவர் எப்போதும்  சொல்வார், ‘இப்போது  நாம்  அமைச்சரவையில் இருக்கிறோம்’ என்று. அந்த  வாய்ப்பை  நன்கு  பயன்படுத்திக் கொள்ள  வேண்டும். மற்றவர்கள்  பேசுவதைக்  கேட்டுக் கொண்டிருந்துவிட்டு  வீட்டுக்குப்  போவது  மட்டும்  போதாது”, என்றாரவர்.