நாட்டின் பொருளாதாரம் மீட்சிபெற பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அகற்றப்பட வேண்டும் என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட்.
நலிவுற்று வரும் மலேசியப் பொருளாதாரம் புத்தெழுச்சி பெற இது ஒன்றே வழி என முன்னாள் பிரதமர் தம் வலைப்பதிவில் கூறினார்.
“நாட்டின் நாணயமும் பொருளாதாரமும் மீட்சி பெற வேண்டுமானால் நஜிப் பிரதமராக இருப்பது முடிவுக்கு வர வேண்டும். நஜிப் வெளியேற வேண்டும் என மலேசியர்கள் கோரிக்கை விடுக்க வேண்டும்.
“அவர் வெளியேறிய பின்னரே மலேசியர்கள் தலை நிமிர முடியும்”, என்றாரவர்.
நஜிப் போகப் போவதும் இல்லை. தே.மு. அடுத்த தேர்தலில் வெற்றி பெறப் போவதுமில்லை. சுப்ரமணியம், சரவணன், கமலநாதன் அடுத்த தேர்தலுக்குப் பிறகு அமைச்சராகப் போவதும் இல்லை. இனி தே.மு.- க்கு அனைத்துமே சூன்னியம்தான்.
காகாதிரே உங்கள் ஆட்சிகாலத்தில் உருவானது தானே சர்வதிகார ஆட்சி.பல ஊழல்கள் நடந்து அனைத்தும் மூடி மறைகபட்டது உங்கள் காலத்தில்தானே.அதன் தொடர்ச்சி இப்பொழுது ஆட்சி.உங்கள் குறையை முதலில் உணர்ந்து பேசுங்கள்.அன்று தூய்மையான நியாயமான ஆட்சியை நீ நடத்தியிருந்தால் இன்று இந்த நிலைமை இல்லை.சிங்கப்புரைவிட பல மடங்கு உயர்ந்திருக்கலாம்.
இனத்துவேசம் அதுதான் உங்கள் ஆட்சியின் 22 ஆண்டு சாதனை காலம்.திறமையானவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் முட்டாள்களுக்கு முன்னுரிமை வழங்கியதன் விளைவு இன்றைய நாட்டின் நிலைமை.இனி என்னதான் கத்தினாலும் மாற்றம் ஏற்பட போவது இல்லை.அந்நிய நாட்டவர்களுக்கு இடம் கொடுத்து நாட்டை கெடுத்து வைத்தது உங்கள் பங்கு அளப்பரியது.மலாய் சீனர் தமிழர் என இன பாகு பாடு காட்டாமல் சம நிலையில் வாய்ப்பு வழங்கியிருந்தால் நாடு முன்னெற்ற பாதையில் சென்று கொண்டிருக்கும்.அனால் நாடு இன்று கீழ் நோக்கி உள்ளது.
தே.மு.- க்கு அனைத்தும் சூனியம்னா நமக்கு திபாவளிதான்….முதல் வேலையா அந்த 3 கச்சியிலும் கடந்த 58 ஆண்டு காலம் நாட்டை ஏப்பாம் விட்ட அரசியல் திருடர்களின் சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் யுவர் ஹோனர்…..மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்!!!
உன் புலம்பல் செவிடன் காதில் ஊதிய சங்கு! நீர் ஊட்டி ஊட்டி வளர்த்த செல்லங்கள் உன் மார்பில் பாய தயாராகின்றன!எல்லாம் நீர் செய்த வினைப் பயன் !
துன் அவர்களே நீங்களே முன் வந்து ஒரு பேரணியை அல்லது ஒவ்வொரு மாநிலமாக சென்று நஜிப்பை விலகச் சொல்லி கூட்டங்க்கலை ஏற்பாடு செய்யுங்கள். அறிக்கை விடுவதால் எந்த பயனும் இல்லை…?
Jamaludin உங்கள் கருத்தை நான் வரவேக்கிறேன்,
துன் களத்தில் இறங்கினால்தான் நாடு உருப்பிடும்.
ஆமான் நானுன் ஆதரிக்கிறேன்! நீர் போட்ட எலும்பு துண்டை கவ்விக்கொண்டு…….22 ஆண்டுகள் நாட்டையும் மக்களையும் ஏப்பம் விட்டதை வாலட்டிகொண்டெ மறந்து விடுகிறேன்!!!
அவர் அகற்றபட்டால் பொருளாதாரம் மீட்சி பெறலாம். ஆனால் அவர் அகற்றப்படுவதிலிருந்து எப்படி மீட்சிப்பெறுவது என்பதை நீங்கள் சொல்லிக் கொடுத்ததை அணு அளவும் அசையாமல் பின் பற்றுகிறார். அப்புறம் எப்படி அகற்றுவது?
கையால் ஆகாத மடையர்கள் எல்லாரும் தூக்கி எறியப்பட வேண்டும். ஊழல்வாதிகளையும் சேர்த்துதான்.
மாமா மகாதீரே ! நாடு இந்த நிலைமைக்கு வந்ததும், இப்படிப்பட்ட தலைவர்கள் நாட்டின் பிரதமர் ஆனதும், தங்களுடைய “திருவிளையாடல்களில்” ஒன்றுதானே !
இப்பொழுது “குத்துதே” “குடையுதே” என்று வருந்தி என்ன பயன் ?
முன்பு துங்குவை நீ வெளியே போக சொன்னே இப்போ என்னய்யா.
மகதீர் இப்போ அழுவது நாட்டுக்காக இல்லை. அவனுக்கும் அவனுடிய மகன்களுக்கும் தானே. நாஜிப்பு இருந்தால் பி என் பொது தேர்தலில் தோற்பது நிச்ச்ச்சயம். அப்படி நடந்தால், இவனும் உள்ளே போக நேரிடும். மகன்களுக்கும் பாதிப்பு வரும். இதனாலேயே வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு பேசுறான். ஆனாலும் நாஜிப்பு போகனுங்க்றதும் முக்கியம் தான். ஒட்டு மொத்த அம்னோ தலைவனுங்க தொலையனும். அப்பொழுது தான் மலேசிய உருப்படும்.
மலேசியாவின் அரசியலில் என்றும் இல்லாத அளவிற்கு புதிய பக்கம் ஒன்று திறக்கப் பட்டுள்ளது. சீன நாடு நேரிடையாக இங்குள்ள சீனர்களுக்கு ஆதரவாக கையை உயர்த்திருப்பது அனைத்து அரசியல் விமர்சகர்களின் கண் இமையை உயர்த்தியுள்ளது. இது தற்கால அமீனோ கட்சியின் அரசியல் சாணக்கியத்தை பெரிய கேள்விக் குறியாக்கியுள்ளது. கெடுவான் கேடு நினைப்பான் என்பதனை அமீனோ கட்சி நிருபித்துள்ளது.
அம்னோ காரனுக்கெல்லாம் இப்போ ,வயிறு கலக்க ஆரம்பிக்குது .