பெட்டாலிங் ஸ்திரீட் பகுதியில் சிகப்புச் சட்டைகளின் நடமாட்டம் இல்லை எனப் போலீஸ் அறிவித்துள்ளது.
சுற்றுப்பயணிகளைக் கவரும் இடங்களில் ஒன்றான அங்கு எல்லாம் வழக்க நிலையில் இருப்பதாக டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைவர் சைனல் அபு சாமா கூறினார்.
“இதுவரை பெட்டாலிங் ஸ்திரீட் பகுதியில் வியாபாரம் எப்போதும் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறது”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
அங்கு இன்று சிகப்புச் சட்டைப் பேரணி நடக்கப்போவதாக ஒரு வாரமாக விடுக்கப்பட்டு வந்த மிரட்டல்களினால் அங்கு பதற்றம் மிகுந்திருந்தது.
ஆனால், நேற்றிரவு ஜமால் முகம்மட் யூனுஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து பேரணி நடத்தும் திட்டம் கைவிடப்பட்டதைப் போல் தெரிகிறது.
ஒரு வேளை அவர்கள் சீன தூதரகத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்களோ?