பெட்டாலிங் ஸ்திரீட்டில் வியாபாரம் 40 விழுக்காடுவரை குறைந்தது

tradeகடந்த  வாரம்   ஹிம்புனான்  ரக்யாட்  சிகப்புச்  சட்டைப்  பேரணி  நடந்ததிலிருந்து  பெட்டாலிங்  ஸ்திரீட்டில்  வியாபாரம்  30-இலிருந்து 40 விழுக்காடுவரை குறைந்திருக்கிறது  என  கெராக்கான்  பொதுச்  சேவை  மற்றும்  புகார்  பிரிவுத்  தலைவர்  வில்சன்  லாவ்  கூறினார்.

பேரணி  தொடர்பான அறிக்கைகளும்  செயல்களும்  வணிகர்களுக்கு  அச்சத்தைத்  தந்துள்ளன. பொதுமக்களும் வருவதற்குப்  பயப்படுகிறார்கள்  என வில்சன்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

புள்ளிவிவரம்  கோலாலும்பூர்  அங்காடி  மற்றும்  சில்லறை  வியாபாரிகள்  சங்கத்திடமிருந்து கிடைத்ததாக  அவர்  சொன்னார்.

வில்சன்,  சுங்கை புசார்  அம்னோ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  கைது  செய்யப்பட்டதையும்  பேரணி  நடத்தும்  திட்டம்  கைவிடப்பட்டதையும்  வரவேற்றாலும்  பாதிப்பு   ஏற்கனவே  நிகழ்ந்து  விட்டது  என்றார்.

“(பேரணி) இரத்தானது  நல்லதுதான். ஆனால்,.  பேரணி  என்பவை  நம்மிடையே  ஒற்றுமையை  ஏற்படுத்த  மாட்டா.  அழிவை,  அதுவும்  பொருளாதார  அழிவைதான் ஏற்படுத்தும்”, என்றார்.