உத்துசான்: சீன தூதர் விபச்சாரிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும், பெட்டாலிங் ஸ்டிரீட்டை அல்ல

 

Utusanchineseambasadorசெப்டெம்பர் 25 இல் சீனாவின் தூதர் ஹுவாங் ஹூய் காங் கோலாலம்பூர் பெட்டாலிங் ஸ்டிரீட்டிற்கு வருகையளித்த போது தெரிவித்த கருத்துக்காக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா அவரை கடுமையாகச் சாடியுள்ளது.

பெட்டாலிங் ஸ்டிரீட் பிரச்சனைக்கு மாறாக அவரது நாட்டின் விபச்சாரிகள் மீது அவர் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த இதழின் அவாங் செலமாட் எழுதியுள்ளார்.

பெட்டாலிங் ஸ்டிரீட்டில் சட்ட விரோத ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற மிரட்டலை இந்நாட்டின் அதிகாரிகளால் கையாள முடியும் என்பதை தூதர் நம்ப வேண்டும்.

இந்நாட்டில் ஏராளமான சீனகுடிமக்கள் விபச்சாரம் மற்றும் உடற்பிடிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது சீனாவின் தூதர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் சீன அரசாங்கம் இது போன்ற விவகாரங்கள் மீது கடுமையான நடவடிக்கைளை மேற்கொள்கிறது என்று உத்துசானின் ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியா எழுதியுள்ளது.

சீனாவின் தூதர் பெட்டாலிங் ஸ்டிரீட் வருகையின் போது தெரிவித்த கருத்துக்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது அவர் நாடு திரும்ப வேண்டும் என்றும்  அதில் கோரப்பட்டுள்ளது.