மாத்தியாஸ் சாங் விசாரிக்கப்படுவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது

 

Mathaichanமுன்னாள் பிரதமர் மகாதிரின் முன்னாள் அரசியல் செயலாளர் மாத்தியாஸ் சாங் இன்று பிற்பகல் மணி 2.00 க்கு போலீசாரால் விசாரிக்கப்படுவதாக இருந்தது. அது இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தம்மை போலீசார் இன்று பிற்பகல் மணி 2.00 க்கு விசாரிக்க இருப்பதாகவும் தாம் கைது செய்யப்படலாம் என்றும் அவர் நேற்று கூறியிருந்தார்.

வழக்குரைஞரான சாங், 1எம்டிபி சம்பந்தப்பட்ட கணக்குகள் மற்றும் பிரதமர் நஜிப்பு பற்றி பல்வேறு நாடுகளில் போலீஸ் புகார் செய்துள்ள பத்து கவான் அம்னோ முன்னாள் உதவித் தலைவர் கைருடின் அபு ஹசானை பிரதிநிதித்துள்ளதால், போலீசார் அவரையும் விசாரிக்கவுள்ளனர்.

கைருடின் செய்துள்ள போலீஸ் புகாரின் விளைவாக அனைத்துலக அளவில், அமெரிக்கா, ஹோங் கோங் மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட, இது சம்பந்தமான விசாரணை தொடங்கியுள்ளது.

மகாதிருக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் கைருடின் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு குற்றவியல் சட்டம் செக்சன் 124சி இன் கீழ் கைது செய்யப்பட்டார்.

அவரது தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியானதைத் தொடர்ந்து பாதுகாப்பு குற்றங்கள் சட்டம் 2012 இன் கைருடின் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 28 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படலாம்.