பெர்காசா: மலேசிய சீனர்கள் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலிகள்

 

Chinese envoy perkasaமலேசிய சீன சமூகம் மிக அதிர்ஷ்டசாலியானது ஏனென்றால் அச்சமூகம் வேற்றுமை காணல் மற்றும் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் ஆகியவற்றை அது தாங்கிக்கொள்ள வேண்டியதில்லை.

ஆகவே, பெட்டாலிங் ஸ்டிரீட்டிற்கு கடந்த வாரம் வருகையளித்த சீனாவின் தூதர் ஹுவாங் ஹுய் காங் கூறிய கருத்துகள் தேவையற்றவை என்று பெர்காசா தகவல் பிரிவுத் தலைவர் ஹசான் பாஸ்ரி முகம்மட் கூறினார்.

சீன சமூகத்திற்கு எதிரான எந்த விதமான வன்முறை மற்றும் வேற்றுமை காணல் ஆகியவற்றை சீனா நிராகரிக்கிறது. ஏனென்றால், அது மலேசியா மலேசிய சீனர்களை கொடுமைப்படுத்துகிறது அல்லது அவர்களுக்கு அநீதி இழைக்கிறது என்பதாகும் என்று அந்த தூதர் கூறியிருப்பது ஏற்புடையதல்ல என்று ஹசான் மேலும் கூறினார்.

உண்மை என்னவென்றால், மலேசிய சீனர்கள்தான் மிகப் பெரிய அதிர்ஷடசாலிகள் ஏனென்றால் அவர்களுக்கு எதிராக வேற்றுமைக் காட்டப்படுவதில்லை என்பதோடு பல்லின சமுதாயத்தின் உரிமைகளை, கல்வி, அரசியல், சமூக, பொருளாதார, சுகாதாரம் மற்றும் இதர நன்மைகள் உட்பட, அவர்கள் அனுபவிக்கின்றனர் என்றார் ஹசான்.

“எடுத்துக்காட்டாக, மலேசியாவின் பெரும்பாலான கோடீஸ்வரர்கள் சீன சமூகத்தினராவர்”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

ஆகவே, பெட்டாலிங் ஸ்டிரீட் பிரச்சனையில் அவரது மூக்கை நுழைப்பதை விட மலேசியாவில் சீன குடிமக்கள் விபச்சாரம் மற்றும் சூதாட்டம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருப்பதை அந்தத் தூதர் கவனிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.