லாக்- அப்பிலிருந்து இப்போதுதான் வெளிவந்திருக்கும் மலாய் என்ஜிஓ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், அடுத்த “பிரம்மாண்டமான” பேரணியை காஜாங்கில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
பிகேஆர் தலைவரும் காஜாங் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தேர்தெடுக்கப்பட்டு ஈராண்டுகள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லையாம். அதுதான் அங்கு பேரணி நடத்தப்போவதற்கான காரணம் எனறு ஜமால் தெரிவித்ததாக நியூ ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் அறிவித்தது.
“மூன்று தடவை காஜாங்கில் மலாய்க்காரர்களையும் சீனர்களையும் இந்தியர்களையும் சந்தித்துப் பேசினேன். முன்பு வான் அசிசாவை ஆதரித்த அவர்கள் இப்போது ஏமாந்து போனதாகக் கருதுகிறார்கள். அவர்மீது ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்”, என்றாரவர்.
வெள்ளப் பெருக்கு, போக்குவரத்து நெரிசல், குப்பைகள் முறையாக அகற்றப்படாத நிலை போன்ற பிரச்னைகளை அவர்கள் எதிர்நோக்குவதாக அவர் சொன்னார்.
பேரணி பற்றிய விவரங்கள் அக்டோபர் 11-இல் வெளியிடப்படும் என்றாரவர்.
நல்ல விஷயமே! மக்கள் நலன் கருதி, இது போன்ற பேரணிகள் நடத்துவதில் எந்தத் தவறும் கிடையாது, அதைவிடுத்து, இன உணர்வுகளை தூண்டிவிட்டு, கீழ்த்தரமான முறையில், சிவப்பு சட்டை பேரணி போன்றவை மிகவும் கண்டிக்கத்தக்கவை. இந்தசெய்தி கிடைத்ததும், GST போன்ற வரிச்சுமைகளை அகற்றக் கோரி நஜிப்பின் பெக்கான் தொகுதியில், பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளார், பகாங் மாநில ஜனநாயக செயல் கட்சியின் துணைத்தலைவர் தோழர் ஜே. சிம்மாதிரி [அப்பளசாமி]. தன் கட்சி மேலிட உத்தரவை எதிர்பார்க்கிறார். மக்கள் இதற்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்போமாக.
காஜாங்கில் பேரணி நடத்தி ஒரு உரோமத்தையும் புடுங்க போறது கிடையாது ? அதற்கு பதிலாக “சாகும்வரை உண்ணாவிரதம்” இருந்து மலாய்க்காரர்களுக்காக உயிர் தியாகம் செய்யலாமே !
நாட்டுலே மக்கள் தொகையாவது குறையுமே !
இவன் நோக்கமே காஜாங் மக்களுக்கு நல்லது செய்ய இருக்காது .. இப்படி சொல்லி அங்கே இன உணர்வை தூண்டி விடுவான்..
எப்படியோ இது நடக்கப் போவதில்லை! ஆனால் நல்லதைச் செய்கிறேன் என்பதால் மஞ்சள் சட்டையை அணிந்து கொள்ளுங்களேன்!
வணக்கம். காஜாங் என்ன பெல்ட பகுதியினு இவர் நினைத்தார….போய்தான் பார்ட்கட்டும் அவருக்கு உள்ள மதிப்பை.
57 ஆண்டுகள் ஆகியும் பாரிசன் அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. இதற்கு என்ன சொல்ல போகிறிர்கள் சிகப்பு சட்டை அறிவாளிகளே?
25/9/2015 நடைபெறயிருந்த பெட்டாலிங் சாலை மறியல் பற்றி உள் துறை துணை அமைச்சர் டத்தோ நூர் ஜாஸ்லான்ன முகமது போலியான பொருட்கள் விற்பனையை தவிர்க்க உதவ நல்ல கருத்துகள் இருப்பின் அவர்கள் அதிகாரிகளை சந்தித்து பேச வேண்டும் என்று கூறுகிறார. அதேப்போல் காஜாங்கில் வெள்ளப் பெருக்கு, போக்குவரத்து நெரிசல், குப்பைகள் முறையாக அகற்றப்படாத நிலை போன்ற பிரச்னைகளுக்கு தீரவுகான காண போவதாக கூறும் ஜாமல், நல்ல கருத்துகள் இருப்பின் அவர்கள் அதிகாரிகளை சந்தித்து பேச வேண்டும் அதைவிடுத்து குள்ள நரி மாதிரி சொல்வது ஒன்று செய்வது வேறாக இருக்க கூடாது.
என்ன ஒரு கடமை .எல்லாம் மக்கள் பணம் .எந்த அம்னோ மட மந்த்ரி
வேலை என தெரியவில்லை
வேலை இல்லா அம்பட்டன் எதையோ செரச்சானாம்!
வேலை இல்லாத அம்பட்டன் இப்பொழுது பூனையையும் சிரைக்க முடியாது, பொண்ட ………யும் சிரைக்க முடியாது . காரணம் அவையெல்லாம் தெளிவடைந்துள்ளன.முட்டைக்கு மயி….. புடுங்கலாம். தம்மிடம் இருக்கும் திறமையை ஆக்ககரமான செயலுக்கு பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவரையும் உள்ளடக்கி எல்லோரும் நன்மை அடைவர். அடுத்தவர் நம்மைவிட முன்னேறி இருந்தால் அவர்களைப்போல் நாமும் முன்னேற அவர்களைப்போல் உழைக்க தயாராக இருந்து வாய்ப்பினை நல்லமுறையில் பயன் படுத்த வேண்டும். அதை விடுத்து அரசியல்வாதிகள் அன்றன்று கொடுக்கும் ஐந்துக்கும் பத்துக்கும் இப்படி தனது திறமையை வீணடித்தால் பிறகு அவதியுறுவது யார். அரசியல்வாதிகள் தமக்கு காரியம் ஆகுமட்டும் நம்மை கவனிப்பான். பின்பு நம்மை காட்டியும் கொடுத்து கெடுப்பான். ஊரோடு சேர்ந்து வாழ்வோம். ஊர் நன்றாக இருந்தால் நடுவில் நாமும் நன்றாக இருப்போம். எத்தன வீடுகளும் (ஏன் அரண்மனைகளும்) இருந்தாலும் ஒரு நேரத்தில் ஓர் இடத்தில்தான் நாம் உறங்க முடியும். படுக்கும் இடத்தின் சுகமும் உறங்கும்வரைதான். உடையும் உணவும் அப்படியேதான். அதிநவீன வாகனங்கள் ஒன்றுக்குமேலும் இருக்கலாம், கழிவறைக்கு நாம் நடந்துதான் செல்லவேண்டும். அளவுக்குமேல் பொருளாதாரமும் இருக்கலாம், அவை நமது வாழ்நாளில் ஒன்றையும் விலைகொடுத்து வாங்கமுடியாது. மனிதரின் வாழ்நாள் ஒரு வரம்புக்குள் கணிக்க பட்டுள்ளது. ஆக அதற்க்கு தேவையான வசதிகளை வைத்துக்கொண்டு மீதியை தேவையுள்ளோருக்கு விட்டுவைத்தால், எல்லோரின் தேவையும் நிறைவடையும். அப்புறம் முன்பொரு கவிஞன் பாடியது போல் ‘ஏழைகளை கதைகளில்தான் வார்க்கணும்’. இறைவன் மனிதனை படைக்கும் முன்பே தேவையானது அனைத்தையும் படைத்துவைத்துள்ளார். இறைவன் படைத்ததை, படைக்கப்பட்டவன் பகிர்ந்து வாழாமல் பதுக்கி வாழ்வதால் எழும் பிரச்சினைகளுக்கு நாம்தானே காரணம். ‘உலகம் சம நிலை பெறவேண்டும், நிறைவே காணும் மனம் வேண்டும், இறைவா அதை நீ தரவேண்டும்’ என்றொரு கவிஞனின் குரலும் கேட்கின்றது. ‘அடுத்தவர் நலனை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்’ என்ற வரிகளும் மீண்டும் ஒலிக்கின்றது. இவையெல்லாம் தமிழ் மொழியானதால் அவர்களுக்கு தெரியவில்லையோ?. அவரவர் மொழியிலும், சமயத்திலும், இனத்திலும் இப்பேர்ப்பட்ட உயரிய கருத்துக்கள் கண்டிப்பாக உள்ளன. உலகம் பார்பதற்கு, வெவேறு வர்ணங்களுடன் அழகாக இருப்பதற்கு இறைவன் மனிதரையும் பல வர்ணங்களிலும், மொழியின் இசை இரசிக்க பல மொழியையும், வெவேறு உருவ அமைப்பும் இட்டு மனிதரை படைத்தாரோ? எல்லோரும் நலமுடன் வாழ இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
லோசிநிக்கா அக்கா! தொழில் செய்பவர்களை இப்படிக் கேலி செய்வது என்னைப் பாதிக்கிறது. இப்படி கேலி செய்தே அந்தத் தொழில் செய்வதே கேவலம் என்று ஒரு நிலையை நாம் உருவாக்கி விட்டோம். இப்போது அந்தத் தொழிலும் சீனர்கள் கையில். தயவு செய்து எந்தத் தொழிலையும் நாம் கேவலப்படுத்த் வேண்டாம். தொழில் செய்பவர்களை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.வாழத்த வேண்டும். வணங்க வேண்டும். நமது எதிர்காலம் தொழில் செய்பவர்கள் கையில்!