பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெளிநாடுகளில் பயணம் செய்யும்போது அந்நாடுகள் அவர்மீது நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
பணச் சலவைக்கு எதிரான நடவடிக்கை என்பது “சாமானிய மக்கள்” மீதுதான் எடுக்கப்படும் என்றாரவர்.
“நான் பணச் சலவையில் ஈடுபட்டால் கைது செய்யப்படலாம். ஆனால், நீங்கள் உயர் பதவியில் இருப்பவர் என்றால் உங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்.
“உலக நாடுகள் எதுவும் செய்யும் என்று நான் நினைக்கவில்லை…….பிரச்னைக்குரிய பணம் இருப்பது தெரிந்தால் நாம் வங்கிக் கணக்கை முடக்கி வைப்போம். ஆனால், அவர்கள் எதுவும் செய்யவில்லை”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
1எம்டிபி மீது வெளிநாடுகளில் நடைபெறும் விசாரணைகள் பற்றி வினவியதற்கு மகாதிர் இவ்வாறு கருத்துரைத்தார்.
அது தெரிந்து தானே அவர் வெளிநாடு சென்று ‘கோல்ப்’ விளையாடி விட்டு வருகிறார்!
உங்கள் சுயநலத்துக்காக சட்டத்தை மாற்றியமைத்தது மருந்துவிட்டிரோ காகாதிர் அவர்களே.அதன் தொடர்ச்சிதான் இன்றைய நாட்டின் நடப்பு.