காஜாங் பேரணி என்பது உண்மை நிலவரங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரமாகும்

kajangமலாய்  என்ஜிஓ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  காஜாங்கில்  கண்டனப்  பேரணி  நடத்துவது  ஒரு  வேண்டாத  வேலை  என்று  கூறிய  அத்தொகுதியின்  சட்டமன்ற  உறுப்பினர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில் அப்பேரணி கவனத்தைத்  திசை திருப்பும்  ஒரு  தந்திரம்  என்றார்.

அதனால்  எந்தப்  பயனுமில்லை, நாட்டை  எதிரநோக்கும்  பிரச்னைகளை  அது  தீர்க்கப் போவதில்லை  என  பெட்டாலிங்  ஜெயாவில்  செய்தியாளர்களிடம்  வான்  அசிசா  கூறினார்.

“அங்கு பேரணி  நடத்துவதால்  எந்தப்  பிரச்னையும் தீரப்  போவதில்லை.  அது  உண்மையான  பிரச்னைகளிலிருந்து  கவனத்தைத்  திசை  திருப்பும்  தந்திரம்  என்றே  நினைக்கிறேன்.

“புகை  மூட்டம்  பற்றிப்  பேசுங்கள், 1எம்டிபி, நம்  பொருளாதாரம், சரிவு கண்டுவரும்  ரிங்கிட்டின்  மதிப்பு, பசிபிக்  மண்டல ப்ங்காளித்துவ  உடன்பாடு, பிரதமர்  பற்றிய  எதிர்மறையான  செய்திகள்…….இவை  பற்றியெல்லாம்  பேசலாமே”, என்றாரவர்.

அப்படியானால், ஜமால்  அவரது  பேரணியைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  தொகுதியான  பெக்கானில்  நடத்துவது  பொருத்தமாக இருக்குமா  என்று அசிசாவிடம்  வினவியதற்கு “ஒரே  புகை  மூட்டமாக  இருக்குமே”, எனப் பட்டென்று  பதில்  வந்தது.