முகைதின் யாசின் துணைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டது ஒரு விவேகமற்ற நடவடிக்கை என்றும் அதை அம்னோ அடிநிலை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அம்னோ கிளைத் தலைவர் ஒருவர் சொன்னார்.
முகைதினை நீக்கும் முடிவானது கட்சியைப் பிளவுபடுத்தும் ஒன்றாகத்தான் கருதப்படுகிறது என புசாட் பண்டார் தாமான் செம்பாகா அம்னோ கிளைத் தலைவர் சைட் சைபுடின் சைட் ஹர்மான் கூறினார்.
ஆனாலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு அதற்கான அதிகாரம் உண்டு என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
“அடிநிலையில் உள்ள எங்களால் அதை ஏற்க முடியவில்லைதான். ஆனால், அது பிரதமரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதனால் கேள்வி கேட்க முடியாது.
“என்றாலும் அதனால் கட்சி உடைபடலாம் என்பதால் அதை ஒரு விவேகமற்ற செயல் என்றே கருதுகிறோம். கட்சி உறுப்பினர் என்ற முறையிலும் கிளைத் தலைவர் என்ற முறையிலும் அதை ஒரு விவேகமான செயலாக நான் நினைக்கவில்லை”, என்றாரவர்.
கட்சி என்ன சொல்லுதோ அதை உறுப்பினர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்சியின் முடிவை எதிர்ப்பதற்கு இருக்கும் வழிகள் எல்லாம் தலைவரால் மூடப் பட்டு விட்டால், சுதந்திரம் இல்லாத அடிமைகளாக அக்கட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டியது அடிமட்ட உறுப்பினர்களின் பரிதாப நிலை. இதுதான் இந்நாட்டு அரசியல் கட்சிகளில் உருப்பினர்களாவோருக்கு கிடைக்கும் பிரதிபலன்!
இப்படி உறுப்பினர்களுக்கு பேச்சுரிமை இல்லாத ஓர் ஆட்சி நல்லாட்சியா?
தவறே என்றாலும் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாது? அப்படி மீறினால் கட்சியில் இருக்க முடியாது. நல்ல ஆட்சிமுறை!!!
மேல்நிலை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கு தெருப்போராட்டவதி ஒருவர் அப்பனுக்காகப் போராட்டத்தை மாற்றிக் கொண்டாரே! அடிநிலை அடங்கிவிடும்!