1எம்டிபி கடனை வைத்து 1.7மில்லியன் மாணவர்களின் பிடிபிடிஎன் கடன்களைத் திருப்பிச் செலுத்தலாம்

loanபாண்டான் எம்பி-யும்  பிகேஆர்  உதவித்  தலைவருமான  ரபிஸி  ரம்லி,  1எம்டிபி-இன்  கடன்களைக்  கொண்டு  1.7 மில்லியன்  மாணவர்கள்  உயர்க் கல்விக்  கடனுதவி  நிறுவனத்திடம்  பெற்ற கல்விக் கடன் தொகைகளைத்  திருப்பிச்  செலுத்தி  விடலாம்  என்றார்.

2015 மார்ச்  31வரை  பிடிபிடி- என்னிடமிருந்து 1,716,475  மாணவர்கள்  கல்விக்காக   பெற்றுள்ள கடன் ரிம13.3 பில்லியன்.

“இது  கல்வி  துணை  அமைச்சர்   பி.கமலநாதன்  அண்மையில்  நாடாளுமன்றத்தில்  தெரிவித்த  புள்ளிவிவரம். 1எம்டிபி-இன்  ரிம50பில்லியனுடன்  ஒப்பிடும்போது  ரிம13.3 பில்லியன்  சிறிய  தொகைதான்”, என்றாரவர்.

பிடிபிடிஎன் நிதியை  ஒழித்து  கல்வியை  இலவசமாக்க  வேண்டுமானால் மக்கள்  கூடுதல்  வருமான  வரி  செலுத்த  வேண்டி  இருக்கும்  என  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நியூ  யோர்கில்  மலேசிய  மாணவர்களிடம்  கூறியதற்கு  ரபிஸியின்  எதிர்வினை  இது.