இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஒரு லீட்டருக்கு 10 சென் விலை ஏற்றம் காண்கிறது.
கிடைத்தத் தகவல்படி, ஒரு லீட்டர் ரோன் 95 இன் புதிய விலை ரிம2.05; ரோன் 97 இன் விலை ரிம2.45.
டீசலின் விலை தற்போதைய ஒரு லீட்டர் விலை ரிம1.80 லிருந்து ரிம1.90 க்கு உயர்கிறது.
இத்தகவலை ஓரியண்டல் டெய்லி வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் விட்ட பணத்தை ஒக்டேபர் மாதம் எடுத்து கொள்கிறார்கள் அவளவுதான் இதில் எங்கே மக்கள் சுமையை அவர்கள் பாது காக்கிறார்கள்.நத்திங்
எரிபொருள் விலை உயர்வு வயிற்று எரிச்சலை அதிகமாக்குகின்றது.
மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் உம்னோ ஆட்சியின் வித்தைகளில்இதுவும் ஒன்று இது தெரிந்த விஷயம் தானே .
அரசாங்கத்தின் சுமையை மக்கள் பகிர்ந்து கொள்ளுகிறார்கள்!
உலக சந்தையில் எரிபொருள் விலை சரிவு கண்டுள்ளது, மலேசிய நாணய சரிவுக்கு ஒரு காரணம் என்று அறிவித்த மறுநாளே அரசாங்கம் அந்தர் பல்டி அடித்து எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதை பார்த்தால், ஒருவேளை “மயிர்” கழுவ MYR 1200.00 செலவு செய்யும் தனது மனைவியின் செலவை சரிகட்ட “ஊநநா” ஊழல் நன்கொடை நாயகனின் சதியாககூட இருக்கலாம்.
எதிர்வரும் வாரங்களில் மலேசிய நாணயத்தின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 20 காசு வீழ்ச்சியடையும் என்பதை நாசூக்காக அரசாங்கம் அறிவிப்பு செய்கிறதோ என தோன்றுகிறது.