‘பெண்டாட்டாங்’ என்று கூறுவோரைச் சாடினார் வரலாற்றாசிரியர் கூ கே கிம்

khooவரலாற்றாசிரியரான  கூ  கே  கிம்,  ‘பெண்டாட்டாங்’ அல்லது  குடியேறிகள்  என்று  அழைப்போரைக்  கடுமையாக  சாடினார்.

சக  குடிமக்களைக்  குடியேறி  வந்தவர்கள்  என்று  அழைப்பது  மக்களை ஒன்றுபடுத்தும்  முயற்சியைத்  தோற்கடித்து  விடுகிறது  என்றாரவர்.

“குடியேறி  என்பது  ஒரு  சொல். இன்னொரு  நாட்டிலிருந்து  இங்கு  வந்திருப்பவர்கள்  குடியேறிகள்தாம்.

“ஆனால், நீண்ட  காலம்  இங்கேயே தங்கியிருந்து குடியுரிமையும்  பெற்று  விட்டால்  அதன்  பின்னர்  அவர்கள்  குடியேறிகள்  அல்லர்.

“அவர்கள் இந்நாட்டுக்  குடிமக்கள்”. நேற்றிரவு  கோலாலும்பூர் மற்றும்  சிலாங்கூர்  சீனர்  அசெம்ப்ளி  மண்டபத்தில்  நடைபெற்ற  ‘மலாய்க்காரர்  தன்மானம்  காத்தல்’  மீதான  கருத்தரங்கில்  கூ  இவ்வாறு  கூறினார்.