பங்: கேள்வி நேரத்தைக் கையாள்வது பிரதமருக்குக் கை வந்த கலை

kina‘பிரதமருடன்  கேள்வி  நேரம்’  என்பது  எதிரணியினருக்கு  ஒரு  வரப்  பிரசாதமாக  இருக்கும்.  அவர்கள்  கேள்விக்  கணைகளால்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைத்  திக்குமுக்காட வைத்து  விடுவார்கள்  என்று  சிலர்  நினைக்கலாம்.

ஆனால்,  கினாபாத்தாங்கான்  எம்பி மொக்தார்  ரடின்  அப்படி  நினைக்கவில்லை.

“அதை எண்ணி  நாங்கள்  கவலைப்படவில்லை. எப்படி  பதிலளிப்பது  என்பது  பிரதமருக்குத் தெரியும்”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

கேள்விகளுக்குப்  பதிலளிப்பதுபோக  அப்படி  ஒரு  அங்கம்,  நஜிப் “சமூக  வலைத்தளங்களில்  உருவாகியுள்ள (எதிர்மறை) தோற்றப்பாட்டைக்  குறைப்பதற்கு”  உதவியாகவும்  இருக்கும்  என  பங்  நம்புகிறார்.

கடந்த  செவ்வாய்க்கிழமை  மக்களவைத்  தலைவர் பண்டிகார்  அமின்  மூலியா, ஆஸ்திரேலியாவில்  உள்ளதுபோல்  மலேசிய  நாடாளுமன்றத்திலும்  பிரதமருடன்  கேள்வி   நேரம் என்ற  அங்கத்தை  அறிமுகப்படுத்த  ஆர்வம்  கொண்டிருப்பதாகக்  குறிப்பிட்டிருந்தார்.

ஆஸ்திரேலியாவில், அந்நாட்டுப்  பிரதமர்  வாரத்துக்கொரு  நாள்  நாடாளுமன்றத்தில்  எம்பிகளின்  கேள்விகளுக்குப்  பதிலளிக்க  வேண்டும்.