எதிரணியினர் நிகழ்வில் கலந்து கொள்வதில் இன்பம் காணும் சைபுடின் அப்துல்லா அவர்களோடு சேர்ந்து கொள்வதே நல்லது என்று கூறினார் அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்.
அந்த முன்னாள் துணை அமைச்சர் உள்ளுக்குள் இருந்து கொண்டே பகைமை பாராட்டக் கூடாது என்றும் தெங்கு அட்னான் எச்சரித்தார்.
“எதிரணியினர் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை விரும்பினால் அவர் எதிரணியினருடன் சேர்ந்துகொள்வதே நல்லது என்பேன். அதன் பிறகு அவர் விரும்பியதைச் செய்யலாம்.
“சதையில் குத்திய முள்ளாக இருக்காதீர்கள். எதிரணி மேலானது என்று நினைத்தால் அங்கேயே போய் விடுங்கள்”, என தெங்கு அட்னான் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
அண்மையில் பக்கத்தான் ஹராபான் அமைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதற்காக சைபுடினுக்கு அம்னோ விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
அய்னா -வின் உறுப்பினர் அந்தஸ்த்தைப் பறித்த மாதிரி இவரையும் தூக்கி விடுவதுதானே? என்ன தயக்கம்?. இப்படி தூக்க ஆரம்பித்தால் அமீனோ கட்சியில் பாதி பேர் காணாமல் போய் விடுவார்கள் என்று பயமோ? இது அரசியல் கட்சிகளுக்கு வெட்கக்கேடான பிழைப்பு.
பெருந்தன்மை என்பது இந்த ஈன அம்னோ ஜென்மங்களுக்கு கிடையாது— இதிலிருந்து தெரிய வேண்டும் எப்படி பட்ட கீழ்த்தர எண்ணத்தை கொண்ட அறிவிலிகள் இவன்கள் என்று