சைபுடின்: இன அரசியலை உதறித்தள்ள மக்கள் தயார்; தலைவர்கள் தயாராக இல்லை

saifudinமக்கள் அரசியலில்  முதிர்ச்சி  அடைந்திருக்கிறார்கள், அனைவரையும்  அரவணைத்துச்  செல்லவும்  , பல்லின  அரசியல்  அணுகுமுறையைக்  கடைப்பிடிக்கவும் ஆயத்தமாக  இருக்கிறார்கள்  என்கிறார்  முன்னாள்  துணை  அமைச்சர்  சைபுடின்  அப்துல்லா.

ஆனால், உயர்  தலைவர்கள்தான்  மக்கள்  இன அரசியலை விட்டு  விலகிச்  செல்ல  இன்னும்  தயாராக  இல்லை  என்று  கூறிக்  கொண்டிருக்கிறார்கள்.

“அரசியல்  சிந்தனையில்  மாற்றம்  ஏற்பட  வேண்டிய  தருணம்  வந்து  விட்டது. அரசியல்  கட்சிகளை  மாற்றலாம்,  அரசாங்கத்தை  மாற்றலாம். ஆனால்,  அரசியல்  சிந்தனை  மாற  வில்லை  என்றால்  எத்வும்  மாறாது.

“மலேசியர்கள்  மாற்றத்துக்கு  ஆயத்தமாகி  விட்டார்கள். மாற்றம்  காண  இன்னும்  தயாராக  இல்லாதவர்கள்  மேல்  நிலையிலும்  இடைநிலையிலும்  உள்ளவர்களே”.  கோலாலும்பூரில்  ‘மலாய்க்காரர்  தன்மானம்  காத்தல்’  மீதான  கருத்தரங்கில்  பேசியபோது  சைபுடின்  இவ்வாறு  கூறினார்.