சீனரை “அறைவேன்” என்றதற்காக தஜுடின் மன்னிப்பு கோர வேண்டும், மசீச

அந்நியரிடம் புகார் செய்யும் எந்த ஒரு சீனரையும் “அறைவேன்” என்று துணை அமைச்சர் தஜுடின் அப்துல் ரஹ்மான் விடுத்திருந்தTajuddindyminister1 எச்சரிக்கை “அதிர்ச்சி அளிக்கிறது. அதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று மசீச செனட்டர் கோ சின் ஹான் கூறினார்.

மலேசியாவுக்கான சீனாவின் தூதர் ஹுவாங் ஹுய்காங் தெரிவித்திருந்த கருத்தைத் தொடர்ந்து தஜுடின் இனப் பகமையைத் தூண்டி விடுகிறார் என்றார் கோ.

Tajuddindyminister2“தஜுடின் அவர் கூறியதை உடனடியாக திரும்பப் பெற்றாக வேண்டும். சீனர் சமூகத்திடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும். எந்த ஒரு சீனரையாவது அறைவதற்கு அவர் துணிந்தால், மசீச அசைவற்றிருக்காது.

“இது போன்ற தீவிரவாத அறிக்கை ஒரு தீவிரவாதியிடமிருந்து மட்டுமே வர முடியும்.

“மலேசிய அரசாங்கத்தைப் பற்றி மலேசிய சீனர்கள் எப்போது அந்நிய அரசாங்கங்களிடம் புகார் செய்தனர் என்பதையும் எந்த ஒரு சீனர் எப்போது தாங்கள் சீனாவுக்கு திருப்பிப் போகும் எண்ணம் கொண்டுள்ளோம் என்று கூறியதையும் தெளிவாகக் கூற வேண்டும் என்று நாங்கள் தஜுடினை வற்புறுத்துகிறோம்”, என்று செனட்டர் கோ மேலும் கூறினார்.