நஜிப்புக்கு வீர வரவேற்பு

welcomeஐநா  பேரவைக்  கூட்டத்துக்கும்  மீலான்  நகருக்கும்  வருகை  மேற்கொண்டு  விட்டு  நாடு  திரும்பிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  வரவேற்க  ஆயிரத்துக்கு  மேற்பட்டோர் கோலாலும்பூர்  அனைத்துலக  விமான  நிலையத்துக்கு  வந்திருந்தனர்.

பிரதமரையும்  அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூரையும்  ஏற்றிவந்த  சிறப்பு  விமானம்  காலை  மணி  9.55க்குத்  தரை  இறங்கியது.

அவரின்  ஆதரவாளர்கள்  காலை  7மணிக்கே  விமான  நிலையம்  வந்து  விட்டனர்.

அவர்கள்  “Selamat Pulang Wira Negara dan Keamanan Sejagat” (தேசிய  வீரரே உலக  அமைதிக்காக்கும்  வீரரே  வருக), “Najib Razak Pejuang Keadilan Terhadap Palestin dan Umat Islam” (பாலஸ்தீனத்துக்கும்  முஸ்லிம்களுக்கும்  நீதி  கிடைக்கப்  போராடும்  நஜிப்  ரசாக்), “Allah Selamatkan Najib Allah Selamatkan Palestin” (அல்லா  நஜிப்பைக்   காப்பானாக, அல்லா  பாலஸ்தீனத்தைக்  காப்பானாக) என்று எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

பிரதமரை  வரவேற்க துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட் ஹமிடி,  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்,  தொடர்பு, பல்லூடக அமைச்சர்  சாலே  சைட்  கெருவாக்,  சுகாதார  அமைச்சர்  எஸ். சுப்ரமணியம்,  போக்குவரத்து  அமைச்சர்  லியோ  தியோங்  லாய்  ஆகியோரும்  அரசாங்க  அதிகாரிகளும் வந்திருந்தனர்.