அமைதிப் பேரணி நடத்துவதற்குமுன் 10 நாள்களுக்கு முன்னதாக போலீசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற விதி சட்டப்படி சரியானதே என்ற முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக பிகேஆர் இளைஞர் பகுதி கூறியது.
ஜோகூர் பிகேஆர் நிர்வாகச் செயலாளர் ஆர். யுனேஸ்வரனைக் குற்றவாளியாக்கிய இத்தீர்ப்பு, கடந்த ஆண்டு இதே நீதிமன்றம் தம் வழக்கில் வழங்கிய தீர்ப்புடன் முரண்படுகிறது என பிகேஆர் இளைஞர் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹமட் தெரிவித்தார்.
நிக் நஸ்மியின் வழக்கில், முறையீட்டு நீதிமன்றம், அமைதிப் பேரணிச் சட்டம் பகுதி 9(5)-இன்கீழ் 10-நாள்களுக்கு முன்னதாக தெரியப்படுத்த வேண்டும் என்பது அரசமைப்புக்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்திருந்தது.
நீதிமன்றங்கள் கொடுக்கும் மாறுபட்ட விளக்கங்களினால் அடிப்படை உரிமைகள்மீது குழப்பம் உருவாகியுள்ளதாக நிக் நஸ்மி ஓர் அறிக்கையில் கூறினார்.
இவ்விவகாரம் கூட்டரசு நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டால் அந்தச் சட்டத்துக்கு விளக்கமளிப்பதில் அது “துணிச்சலுடனும் நியாயமாகவும்” செயல்பட வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.