நிக் நஸ்மி-மீது மீண்டும் குற்றம் சாட்ட இயலாது: நீதிமன்றத்தில் வலியுறுத்து

nik nazசிலாங்கூர்  ஆட்சிக்குழு  உறுப்பினர்  நிக்  நஸ்மி  நிக்  அஹ்மட்  கருப்பு  505  பேரணி நடத்தியபோது  10-நாள்களுக்கு  முன்னதாகவே  பேரணி  பற்றித்  தெரியப்படுத்தத்  தவறியதாக  மூன்றாவது  தடவையாக  குற்றம் சாட்டப்பட்டார்.

கடந்த  வியாழக்கிழமை  முறையீட்டு  நீதிமன்றம்,  அமைதிப்  பேரணிக்கு  10 நாள்களுக்கு  முன்னதாகவே  அதைத்  தெரியப்படுத்தத்  தவறுவது  குற்றம்  என்று  கூறும்  2012  அமைதிப்  பேரணிச்  சட்டம் (பிஏஏ) பகுதி  9(5) அரசமைப்புப்படிச்  சரியானதே என்று  தீர்ப்பளித்திருப்பதை  அடுத்து  நிக்  நஸ்மிமீது  மீண்டும்  வழக்கு  போடப்பட்டுள்ளது.

நிக்  நஸ்மியின்  வழக்குரைஞர்  ஷியாரெட்சான்  ஜொஹன்,  குற்றச்சாட்டு  சட்டப்பூர்வமானதா  இல்லையா  என்பது  பற்றிக்  கேட்கவில்லை  என்றும்  ஏற்கனவே  விடுவிக்கப்பட்ட  தம்  கட்சிக்காரர் மீது  மீண்டும் அதே  குற்றச்சாட்டைச்  சுமத்த  முடியுமா  என்பதே  தம்முடைய  கேள்வி  என்றார்.

ஏற்கனவே  விடுவிக்கப்பட்ட  ஒருவர்மீது,  அதே  குற்றத்துக்காக  மீண்டும்  வழக்கு  தொடுக்க முடியாது  என்று கூட்டரசு  அரசமைப்பு  பகுதி 7(2)  கூறுவதை  ஷியாரெட்சான்  சுட்டிக்காட்டினார். அவருக்கு  அளிக்கப்பட்ட தீர்ப்பை  மேல்  நீதிமன்றம் ஒன்று  தள்ளுபடி  செய்திருந்தால்  மட்டுமே அவர்மீது  மீண்டும்  வழக்கு  தொடுக்க  முடியும்.