அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேனுக்கு அம்னோவில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான எழுவர் பற்றித் தெரியவில்லை.
அவர்கள் யார் என்று வினவியதற்கு, “தெரியாது” எனச் சுருக்கமாகப் பதிலிறுத்தார்.
கட்சித் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரிடம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று வினவியதற்கு அவர் அம்னோவில் எழுவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது பற்றிப் பரிசீலிக்கப்படுவதாகக் கூறினார்.
கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை பற்றிப் பரிசீலிப்பது வழக்கமான ஒன்றுதான் என்று ஹிஷாமுடின் தெரிவித்தார்.
ஒண்ணுமே தெரியலே இந்த உலகத்திலே.
மகாதீர் மீது நடவடிக்கை எடுத்தால்தான், பல உண்மைகள் வெளிவரும் ஆகவே உடனே நடவடிக்கையில் இறங்குங்கள் ஆண்மகனாக இருந்தால் இல்லையேல் நீங்களெல்லாம் ………….
ஹிசமுடின் அமைச்சர் பொறுப்புக்கும் , அம்னோ தலைவர் பொறுப்புக்கும் தகுதி இல்லாதவர். எதுவுமே தெரியாது என்றால் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே சிறப்பு…?
தெரியாது என்று சொல்ல உனக்கு இவளவு பெறிய ரப்பர் வாய் தேவையா ???