டாக்டர் லிங் லியோங் சிக் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது வெறுப்புக் கொள்ள காரணம் இருக்கிறது என்றும் அதனால்தான் அவர் நஜிப் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார் என்றும் முன்னாள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறினார்.
“மூத்த அரசியல்வாதி என்ற முறையில் கருத்துரைக்கும் உரிமை லிங்குக்கு உண்டு. எதனால் அவர் அப்படிக் கூறினார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. குற்றம் சாட்டப்பட்டதை எண்ணி அவர் வெறுப்படைந்திருக்கிறார்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கிள்ளான் துறைமுக தீர்வையற்ற மண்டல (PKFZ) விவகாரத்தைத்தான் சுவா குறிப்பிடுகிறார்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சரான லிங்மீது 2010-இல்- நஜிப் பிரதமரான ஓராண்டுக்குப் பின்னர்- அரசாங்கத்தை ஏமாற்றியதாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2013-இல் அவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
லிங் விடுவிக்கப்பட்டதற்கு மகாதிரின் சாட்சியம் உதவியது என்பதை மறுக்கவியலாது என சுவா கூறினார்.
“மேலும், லிங்குக்கு மகாதிருக்கும் நீண்டகாலத் தொடர்புண்டு. நஜிப்பைவிட மகாதிருக்குத்தான் அவர் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறார்.
“இப்போது மகாதிர் நஜிப்பை அகற்றுவதில் தீவிரம் காட்டுவதால் லிங் அவருக்கு உதவப் பார்க்கிறார்”, என்று சுவா குறிப்பிட்டார்.
இந்த விசயத்தில் லிங் கருத்துரைத்தது நஜிப்பின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று அம்னோ தலைவர்கள் சிலர் கூறியிருப்பதை சுவாவும் ஒப்புக்கொள்கிறார்.
“அம்னோவுக்கு வெளியார் அதன் விவகாரங்களில் தலையிடுவது பிடிக்காது. அதனால் லிங் கருத்துரைத்தது நஜிப்புக்குத்தான் (அவரது நிலையை வலுப்படுத்திக்கொள்ள) உதவியாக இருக்கும்”, என்றார். .
மாமா மகாதீர் மலேசியாவின் பிரதமர்க இருந்தபோது, லிங் லியோங் சிக்கை 5 நாட்கள் “மலேசியாவின் தற்காலிக பிரதமராக” பதவிவகிக்க உதவியவர் மாமா மகாதீர். ஆகையால் லிங் லியோங் சிக் நஜிப்புக்கு எதிராக திரும்பியது ஆச்சரியத்தை அளிக்க வில்லை. இந்த இரு “முன்னாள்” பிரதமர்களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரியாமல் தலையை சொரிந்து கொண்டிருக்கிறாம் இந்நாள் பிரதமர்.