பிரதமர் நஜிப்புக்கு எதிராக எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தக் கோரும் தீர்மானத்தை பாஸ் ஆதரிக்கும். ஆனால், ஒன்று. முதலில் அதை நன்கு விவாதிக்க வேண்டும்.
எதிரணி சகாக்கள் எழுப்பும் விவகாரங்களுக்கு ஆதரவளிக்க தம் கட்சி எம்பிகள் எப்போதுமே தயாராக இருக்கிறார்கள். ஆனால், முதலில் விவகாரங்களைத் தெளிவாக விவாதித்து விட வேண்டும் என பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார்.
“நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றிக் கலந்துரையாட பாஸ் ஆயத்தமாகவுள்ளது. அதை ஆதரிப்போமா இல்லையா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது. முதலில் தீர்மானத்தைப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, அது பிரதமரைப் பதவி விலகச் சொல்லும் தீர்மானம் மட்டும்தானா என்பது தெரிய வேண்டும்”, என பாஸின் நாடாளுமன்ற கொறடாவான தகியுடின் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
உள்நாட்டு அரசியலில் தனிமைப் படுத்தப் பட்டதால் வந்த மனமாற்றமா? அமீநோவின் ஹுடுத் ஆதரவு வெறும் கானல் நீர் என்றானப் பிறகு, சாஞ்சாடம்மா, சாஞ்சாடு, கை கோர்த்து சாஞ்சாடு என்று பாட்டுப் பாடிக் கொண்டு எதிரணி கூட்டணியுடன் வருவது தெரிகின்றது. அப்படியே பக்காத்தான் ஹரப்பானை உடைக்கச் சதி செய்வதும் தெரிகின்றது. எல்லாம் சிலாங்கூர் மாநில அரசியலால் வரும் பிரச்சனை.
அம்நோவுடன் சேர்ந்து உங்கள் வேலையை கவனியுங்கள்.ஆடு நனையுது ஓநாய் அழுவுது கதை உங்களுக்கு வேண்டாம்.உங்கள் துரோக நாடகம் மக்கள் அறிவர்.அடுத்த பொதுத்தேர்தல் உங்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவர்.
நிலா கட்சியின் அமீனோ ஆதரவாளர்கள் எப்படி அந்த கட்சியை உடைக்க காரணமானார்களொ, அதே யுக்தியை பாஸ் உபயோகித்து மக்கள் நீதிக் கட்சியை உடைக்கப் பார்கின்றது. எதிரணியில் வேற எந்த கட்சியும் பாஸ் கட்சியின் தொடர் வைத்திருக்கவில்லை என்பதால் யாருடன் இவர்கள் கலந்துரையாடல் செய்யப் போகின்றார்கள்? மலாய்க்காரர்கள் கூட்டணி அரசாங்கம் என்ற தனது அரசியல் சித்தாந்ததிற்கு ஆதரவாக மக்கள் நீதிக் கட்சியில் இருக்கும் ஒரு சிறிய கூட்டத்தினரிடம் பின் புற கதவு வழியாக உறவு வைத்துக் கொண்டு மக்கள் நீதிக் கட்சியை உடைத்தால், மக்கள் நீதிக்கட்சி வலுவிழுது மீண்டும் பாஸ் கட்சியின் காலில் விழுந்து இருக்க வேண்டும் என்று நப்பாசை கொண்டுள்ளது. நஞ்சுடைய நாகத்திற்கு பால் வார்க்கின்றனர் மக்கள் நீதிக் கட்சியில் இருக்கும் ஒரு சில சுய நலக்கிருமிகள். மக்கள் நீதிக்கட்சி மலாய்க்காரர்கள் கூட்டணி அரசாங்கம் என்ற சித்தாந்தத்தைப் பின் கதவு வழியாக காய் நகர்த்தினால், சிலாங்கூர் அடுத்த தேர்தலுக்குப் பின் தே.மு. கையில் என்பது திண்ணம். ம.சீ.சா. ம.இ.க., கெரக்கான் கட்சிகள் இந்த விஷம பரீட்ச்சையை அவர்தம் கட்சி உறுப்பினர்களிடையே பரப்பி மலாய்க்காரர் அல்லாத சிலாங்கூர் மக்களை திசைத் திருப்பினால் சிலாங்கூரில் மக்கள் நீதிக் கட்சி மண்ணைக் கவ்வும் என்று திண்ணமாகச் சொல்லலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.