அண்மையில் முடிவுற்ற பசிபிக் வட்டார பங்காளித்துவ உடன்பாடு(டிபிபிஏ) மீதான பேச்சுகளின் விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கம் (அபிம்) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
டிபிபிஏ-யால் நாட்டுக்கு நன்மைதான் என்று மக்கள் நம்பிக்கை கொள்வதற்கு அது உதவும் என அபிம் தலைமைச் செயலாளர் பைசல் அப்துல் அசீஸ் ஓர் அறிக்கையில் கூறினார்.
“டிபிபிஏ ஆதரவாளர்கள் அளிக்கும் உத்தரவாதங்கள் வெறும் வாக்குறுதிகளாக மட்டுமே இருந்து விடக் கூடாது”, என பைசல் கூறினார்.
இப்போதைக்கு அந்த உடன்பாடு பற்றிய விவரங்கள் கமுக்கமாகவே உள்ளன. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
அந்த விவரங்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். “எது நல்லது என்பது அரசுக்குத் தெரியும் என்றிருந்த காலம் போய்விட்டது”, என்றாரவர்.