அண்மையில் செய்துகொள்ளப்பட்ட பசிபிக்- வட்டார பங்காளித்துவ உடன்பாடு (டிபிபிஏ) பற்றிய விவரங்களைப் பொதுமக்கள் இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்து கொள்ளலாம். என்று அனைத்துலக வாணிக, தொழிலமைச்சர் முஸ்டபா முகம்மட் உறுதியளித்துள்ளார்.
“இன்னும் ஒரு மாதத்தில் அந்த உடன்பாடு பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். கூடவே செலவு ஆதாயப் பகுப்பாய்வு அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்”, என அமைச்சர் நேற்றிரவு முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
டிபிபிஏ, பகுப்பாய்வு அறிக்கை இரண்டுமே இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றாரவர்.
மலேசியா அந்த உடன்பாட்டை ஏற்றுக்கொள்ளா ஈராண்டுகள் அவகாசம் உள்ளது. அக்காலக் கட்டத்தில் அது விரும்பினால் அதை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் என்பதையும் முஸ்தபா நினைவுறுத்தினார்.
டிபிபிஏ என்பது மலேசியா உள்பட 12-நாடுகள் செய்து கொண்டிருக்கும் ஒரு வர்த்தக உடன்பாடு.
எதை எதை மூடி மறைத்து வெளியிட வேண்டும் என்று பார்த்தப் பிறகு விவரத்தை வெளியிடுவீர்களா? இதுவும் GST கதைதான். இனி TPPA நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பொருட்களுக்கு நாம் என்ன விலை கொடுக்கப் போகின்றோமோ தெரியவில்லை.
ஆமாம் அலாவுதீன் அற்புத விளக்கு கதையா விளக்கப் போறீர்…? நீங்களும் உங்க ஒப்பந்தமும்…?
நீங்கள் சரியாகத்தான் சொல்லுவீர்கள். நல்லதாக இருந்தால் நிராகரிப்பீர்கள். கெடுதலாக இருந்தால் ஏற்பீர்கள்!