பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவியிலிருந்து வெளியேற ஆட்சியாளர்கள் மன்றம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதன்பின் அவர்கள் நாட்டின் நிர்வாகத்தைச் சீரமைக்க அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்.
சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அப்பாண்டி அலியையும் பதவியைவிட்டுத் தூக்க வேண்டும் என மாபுஸ் வலியுறுத்தினார். பேங்க் நெகாரா 1எம்டிபிமீது புலனாய்வு செய்து அவரிடம் அறிக்கை தாக்கல் செய்து ஒரு மாதமாகியும் அவர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
“மாஃப்யா கூட்டத்தில் நடப்பதுபோல் நாட்டின் நிர்வாகம் நடைபெறுவதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்”, என்றாரவர்..
மாஃப்யா கூட்டத்தில் தலைவரை எதிர்ப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள். நம் நாட்டு அரசியலில் நஜிப்பை எதிர்ப்பவர்கள் “தூக்கி எறியப்படுவார்கள். மிரட்டலுக்கு ஆளாவார்கள்”, என மாபுஸ் விளக்கமளித்தார்.
ஏன் உங்கள் கட்சி அழுத்தம் கொடுக்காதோ? எதிர்கட்சிகள் கொண்டுவரும் நமிக்கைஇல்லா தீர்மானத்திற்கு உங்கள் கட்சி நிலைப்பாடு என்ன?
ஆட்சியாளர்கள் தாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டார்கள். ஆனால் நஜிபுக்கு அவர்களை எப்படி தன் வலையில் சிக்கவைக்க முடியும் என்னும் கலையைத் தெரிந்தவர்! வெற்றி பெறுபவர்கள் ஆட்சியாளர்களா? நஜிபா? பொறுத்திருந்து பார்ப்போம்!