நஜிப்பை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்கிறார் லியோங் சிக்

 

Lingtomeetnajibincourtபிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்காக மசீச முன்னாள் தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் மன்னிப்பு கோரமாட்டார்.

பிரதமர் தமக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பினால், தம்மை தற்காத்துக் கொள்ளப்போவதாக பிரதமருக்குத் தெரிவித்த லியோங் சிக், “மிகுந்த பணிவுடன் நான் உங்களுடைய சவாலை ஏற்றுக்கொள்கிறேன்”, என்றார்.

பிரதமர் சாட்சிக்கூண்டிலேறி அவரது கீர்த்தியைத் தற்காத்துக்கொள்வதை தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக லியோங் கூறினார்.

“நான் கூறியதிலிருந்து மாறப்போவதில்லை என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை”, என்று லியோங் சிக் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.