ஆய்வாளர்: நஜிப் சுல்தான்களின் நம்பிக்கையை இழந்து விட்டார்

ana1எம்டிபி  மீதான ஆட்சியாளர்  மன்றத்தின்  அறிக்கை சுல்தான்களுக்கு  பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்கிடம்  நம்பிக்கை இல்லை  என்பதைக்  காண்பிப்பதாக  ஆய்வாளர்  ஒருவர்  கருதுகிறார்.

மலாய்  ஆட்சியாளர்கள்  அரசாங்க  விவகாரம்  ஒன்றில் இதற்குமுன்  இவ்வளவு  தெளிவாகக்  கருத்துத்  தெரிவித்ததில்லை
என  சிங்கப்பூரின்  ராஜரத்தினம்  அனைத்துலக  ஆய்வுக் கழகத்தைச்  சேர்ந்த  ஜோன் பாங்  கூறினார்.

“அவர் (நஜிப்) மலாய்  ஆட்சியாளர்களின்  நம்பிக்கையை  இழந்து  விட்டார் என்பதை  அவ்வறிக்கை  காண்பிக்கிறது”, என பாங்  கூறியதாக  நியு  யோர்க்  டைம்ஸ்  தெரிவித்தது.

டாருல் ஏஹ்சான்  கழகத்  தலைவர்  ரிட்சுவான்  ஒத்மானும்  இதே  போன்ற  கருத்தைத்தான்  தெரிவித்தார்.

“விவகாரம் (1எம்டிபி விவகாரம்)  மிகவும் பாரதூரமானது. இல்லையேல்  சுல்தான்கள் தலையிட்டிருக்க  மாட்டார்கள்.

“வழக்கமாக,  சுல்தான்கள் இஸ்லாம்  அல்லது  மலாய்க்காரர்  நலன்  தொடர்பான  விவகாரங்கள்  என்றால்  மட்டுமே  கருத்துரைப்பார்கள். அரசாங்க  நிர்வாக  விவகாரங்களில்  அவர்கள்  தலையிடுவதில்லை”, என  ரிட்சுவான்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.