மசீசவுக்கு‘அதிருப்தி’தான் என்றாலும் அது பிஎன்னில்தான் இருக்கும்

liowஅம்னோ  தலைவர்கள்  சிலரது  இனவாத  கருத்துகளால்  மசீச அடிநிலை  உறுப்பினர்கள்  பிரத்மர்  நஜிப்  அப்துல்  ரசாக்குடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ள  வேண்டும்  என்று  விரும்பினாலும்  பிஎன்னை  விட்டு  வெளியேறும்  எண்ணம்  அக்கட்சிக்குக்  கிடையாது.

பிஎன்னைத்  தோற்றுவித்த  கட்சிகளில்  மசீசவும்  ஒன்று  என அதன்  தலைவர்  லியோ  தியோங்  லாய்  குறிப்பிட்டார்.

“இந்நாட்டில் மலாய்க்காரர்கள்,  சீனர்கள்,  இந்தியர்கள்  இருக்கிறார்கள். இவர்கள்  ஒருவர்  மற்றவரோடு  ஒத்துப்போக  வேண்டும். அப்போதுதான்  நாட்டை  ஆள முடியும்.

மசீச  இன  அடிப்படையில்  அமைந்த  கட்சி  என்றாலும்  அது பல்லினக்  கொள்கையைத்தான்  கடைப்பிடிக்கிறது  என்றாரவர்.

நாட்டில்  இன  விவகாரங்கள்  “மிகவும் பிரச்னைக்குரியவை”  என்ற  அளவுக்குச்  சென்று  விட்டதாகக்  கூறிய  லியோ,  பிஎன்  அதற்கு  உடனடியாக  தீர்வு  காண  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டார்.

பிஎன்  இனப்  பிரச்னைகளைக்  கண்டுக்கொள்ளாமல்  இருக்க  முடியாது. சில  தரப்பினர்  சீனப்  பள்ளிகளை  மூட  வேண்டும்  என்று  கோரிக்கை  விடுவதைக்  கண்டு  மசீச  கவலை  கொள்கிறது  என்றும்  லியோ  தெரிவித்தார்.