அலி திஞ்சு மலாக்கா ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டார்

ralமுகம்மட்  அலி  பஹாரோம்  தாமான்  மலாக்கா  ராயாவில்  நடத்தத்  திட்டமிட்டிருந்த  கண்டனப்  பேரணியை  அதிகாரிகள்  கேட்டுக்கொண்டதற்கிணங்கக்  கைவிட்டார்.

அலி  திஞ்சு  என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  முன்னாள்  மலாய்  படைவீரர்  சங்கத்தின் தலைவரான அவர்,  அதே  நாளில்  வரும்  மலாக்கா  ஆளுனரின்  பிறந்த  நாளுக்கு  மரியாதை  கொடுத்து  ஆர்ப்பாட்டத்தைக்  கைவிடுவதாகக்  கூறினார்.

செப்டம்பர்  30-இல், குடிநுழைவுத்  துறை  அதிகாரிகள்  மூவர்  ‘சீனக் குண்டர்களால்’  தாக்கப்பட்டதாகக் கூறி  அதற்குக்  கண்டனம்  தெரிவிக்கவே  அப்  பேரணி  ஏற்பாடு  செய்யப்பட்டதாக  அவர்  கூறினார்.

“போலீசும்  அரசாங்கமும்  அக்டோபர்  10-இல்  பேரணி  வேண்டாம்  என்று  அறிவுறுத்தியுள்ளனர்.

“எனவே ஆளுனரின்  பிறந்த  நாளுக்கு  மரியாதை  தெரிவித்து  அக்டோபர்  10-இல்  பேரணிக்கு வர  வேண்டாம்  என  கெராக்கான்  மெரா  தலைவர்  என்ற  முறையில்  என்  ஆதரவாளர்களைக்  கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.