எம்ஏசிசிமீது மக்களின் நம்பிக்கை பெருக வேண்டும்

zakariaபொதுமக்களின்  நம்பிக்கையை  மேலோங்கச்  செய்யும்  முயற்சிகளை  மலேசிய  ஊழல்தடுப்பு ஆணையம் முடுக்கி  விட  வேண்டும்  அதன்  துணைத்  தலைமை  ஆணையர்  ஜக்கரியா  ஜப்பார்  வலியுறுத்தினார்.

2009-இல் எம்ஏசிசி  தொடங்கப்பட்ட  முதலாமாண்டில் அது  39 விழுக்காட்டு  நம்பிக்கையைப் பெற்றிருந்தது  என்றாரவர்.

“நாங்கள்  மக்களின்  நம்பிக்கையைப்  பெறுவதற்காக  அயராது  பாடுபட்டு  கடந்த  ஆண்டு  நம்பிக்கையை  68 விழுக்காடாக  உயர்த்தினோம்.  ஆனாலும்  இது  போதாது.

“நம்பிக்கையை  மேலும்  உயர்த்துவதற்கு  முயல  வேண்டும். ஊழலைத்  தடுக்கும்  முக்கிய  பொறுப்பு  எங்களுக்குண்டு”, என்றாரவர்.

அக்டோபர்  12-இல், 58வது  வயதில்  பணி ஓய்வு  பெறும்  ஜக்கரியா, ஊழலை  எதிர்ப்பதில் சமுதாயம்  மூன்று  வழிகளில்-  புகார்தாரராக,  சாட்சியாக,  தகவல்  அளிப்பவராக-  பங்காற்ற  முடியும்  என்றார்.