பிரதமர் நஜிப்பும் அவரது சகாக்களும் “கோழைகள்” என்று காவலில் வைக்கப்பட்டிருக்கும் வழக்குரைஞர் மாத்தியாஸ் சாங் வர்ணித்தார்.
தாம் கைது செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர் உண்ணாவிரதத்தையும் தொடங்கினார்.
“நான் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பது பிரதமர் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள், அவருக்கு விசுவாசமான ஆனால் விவேகமற்ற அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள், ஆகியோரின் கோழைத்தனத்தைக் காட்டுகிறது.
“நஜிப்பின் தலைமையில் வழிநடத்தப்படும் அம்னோவின் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கோழைகள் என்பதோடு நம்பிக்கைத்துரோகிகள் என்பதை மலேசிய மக்களுக்குக் காட்டுவதற்காக நான் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட நேரத்திலிருந்து நான் எனது உண்ணாவிரத்தத்தைத் தொடங்கி விட்டேன் என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
டாக்டர் மகாதிரின் முன்னாள் உதவியாளரான சாங் இன்று பிற்பகலில் சோஸ்மா என்றழைக்கப்படும் சட்டம் செக்சன் 124K மற்றும் 124L ஆகியவற்றின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.


























துன் மகாதீரை கைது செய்ய துணிவு இல்லாதவர்கள் அவரின் உதவியாளர்களை கைது செய்வது என்ன நியாயம்…?
சட்டம் ஒரு இருட்டறை
நஜிப் கோழை மட்டுமல்ல …………………………
ஒரு புஜிஸ் மாவீரனின் செயல்பாடுகள் இப்படித்தான் அப்போது இருந்தது என்பதை இப்போது செயலில் காட்டுகிறாரா நஜிப்?
அவர் பின்னால் ஒரு பாறை உள்ளது !!!
என்னை கோழை என்று கூறியதன் மூலம் இஸ்ரேலிய பிரதமர் மாவீரன் பெஞ்சமின் நெத்தன்யாகுவை அவமானபடுத்தி விட்டார்களே என்று நஜிப் வருத்ததுடன் இருக்கிறாராம்.
நீங்கள் வீரன் மகா மகா வீரன்.நாட்டின் நனைய மிதிப்பு குறைத்து,இன உறவு சீற்குளைதத்தது,அதிக அளவு வெளிநாடினர் உள்ளது , சேவை வரி வசூல் ,நன்கொடை வசூல் இவை அனைத்தும் தளபதி நீங்களே. மக்கள் ஆட்சி இல்லாமல் சுயநல ஆட்சிதான் உங்கள் வீரம்.
amma