கைது செய்யப்பட்டுள்ள வழக்குரைஞர் மாத்தியாஸ் சாங்கிற்கு தங்களுடைய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த மெழுகுவர்த்தி விழிப்பு நிலை நடவடிக்கையில் பங்கேற்க வழக்குரைஞர்களை மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் அழைத்துள்ளது.
“மாத்தியாஸ் சாங்கிற்காகவும் வழக்குரைஞர் மன்றத்தின் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்காகவும் மலேசிய வழக்குரைஞர் மன்றம் இன்றிரவு மணி 8.30 க்கு டாங் வாங்கி நிலையத்திற்கு வெளியில் ஒரு விழிப்பு நிலை நடவடிக்கையை மேற்கொள்ளும்”, என்று வழக்குரைஞர் ஷயாரிட்ஸான் ஜோஹன் முகநூலில் தெரிவித்துள்ளார்.
ஷயாரிட்ஸான் ஜோஹன் வழக்குரைஞர் மன்றத்தின் தேசிய இளைய வழக்குரைஞர்கள் குழுவின் தலைவராவார்.
மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா கைது செய்யப்பட்டுள்ள மாத்தியாஸ் சாங்கிற்கு தங்களுடைய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு வழக்குரைஞர்களை டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு விரையுமாறு டிவிட்டர் செய்துள்ளார்.
சாங் கைது செய்யப்பட்டதைக் கேள்வியுற்றதும் அவரை காண்பதற்காக அம்பிகா மூத்த வழக்குரைஞர் டோமி தோமஸுடன் டாங் வாங்கி நிலையத்திற்கு விரைந்தார்.
திருட்டையும் சர்வாதிகாரத்தையும் மூடி மறைக்க எத்தனை பித்தலாட்டங்கள்!!! நாடு நன்றாகவே விளங்கும்!!!! உண்மை மக்களாட்சி செத்துக் கொண்டிருக்கிறது!!!!
சரியான நடவடிக்கை எடுத்துள்ளிர்கள்….!
என்னுடைய மனமார்ந்த வாழ்துக்கள்