நஜிப் ஏழு நாள்களுக்குப் பிறகு லிங்-மீது வழக்கு தொடுப்பது பற்றி முடிவெடுப்பார்

sueபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வழக்குரைஞர்  முகம்மட்  ஹவாரிஸாம்  ஹருன்,  ஏழுநாள்  அவகாசம்  முடிவடைவதற்காகக்  காத்திருப்பதாகவும்  அதன்  பின்னர்  டாக்டர்  லிங்  லியோங்  சிக்மீது  அவதூறு  வழக்கு தொடுப்பது  பற்றி  முடிவெடுக்கப்படும்  என்றும்  சொன்னார்.

“ஏழு  நாள்கள்  முடிவடைவதற்குக்  காத்திருப்பதுதான்  முறையாகும்”,  என்றாரவர்.

“அவரோ  அவரின்  வழக்குரைஞர்களோ  இதுவரை  அதிகாரப்பூர்வமாக  எங்களுக்குப்  பதில்  அளிக்கவில்லை.  இன்று  அல்லது  திங்கள்கிழமை  பதில்  வரலாம். கடிதம் வருவதற்காகக்  காத்திருப்போம்”, என்றவர்  தெரிவித்தார்.

நஜிப்  பதவி  விலக  வேண்டும்  என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  விடுத்த  கோரிக்கையை  ஆதரித்து    லிம் அறிக்கை  விட்டார்  என்பதற்காக அவருக்கு  தம்  வழக்குரைஞர்  மூலமாக  நஜிப்  கடிதம்  அனுப்பி  வைத்தார்.

அதில் அந்த  முன்னால்  மசீச  தலைவர் ஏழு  நாள்களுக்குள்  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என்று  நஜிப்  கூறியிருந்தார்.

ஆனால்,  லிங்  மன்னிப்பு  கேட்கப்  போவதில்லை  என்று  கூறியுள்ளார்.

“நான்  என்ன  கூறினேனோ  அதில்  உறுதியாக  இருக்கிறேன். மன்னிப்பு  கேட்க  மாட்டேன்”, என்று  புதன்கிழமை அவர்  கூறினார்.