இன உணர்வுகள் அபாய எல்லைக்குச் சென்றுள்ளதை பிரதமரிடம் எடுத்துரைத்தார் மசீச தலைவர்

liow tiongமசீச  தலைவர் லியோ தியோங்  லாய், பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கலந்துகொண்ட  மசீச  ஆண்டுக்  கூட்டத்தில் நாட்டில்  இனங்களுக்கிடையில்  பதற்றம்  மிகுந்து  வருவது  குறித்து  கவலை  தெரிவித்தார்.

“நம் நாடு  மிரட்டலுக்கு உள்ளாகியிருக்கிறது”,என்றாரவர்.

இனங்களுக்கிடையில்  நிலவும் பதற்றநிலையால்  இன  உணர்வுகள் அபாய எல்லைக்குச் சென்றுள்ளதாகவும்  அது  நாட்டுக்கு  நல்லதல்ல  என்றும்  அவர்  சொன்னார்.

“எனக்குக்  கவலையாக இருக்கிறது  டத்தோஸ்ரீ (நஜிப்). மிகவும்  கவலையாக  இருக்கிறது. நடப்பதைக்  கண்டு  மக்களும்  கவலை  கொண்டிருப்பார்கள்  என்பது  நிச்சயம்.

“ஏன்  இப்படி? ஏனென்றால்  சமுதாயத்தில்  வெறுப்புணர்வும்  தீவிரவாதமும்  அச்சந்  தரும்  வகையில்  பெருகி  வருகின்றன.

“இது  அரசியலில்  மட்டுமல்ல. அன்றாட  வாழ்விலும்  பரவி  வருகிறது”, என மசீச  ஆண்டுக்  கூட்டத்தில்  லியோ  கூறினார்.

‘சீனா  பாபி’ என்று  இழித்துரைப்பதும்  சீனர்  சமூகத்துக்கு  அறை  விழும்  என்று  மிரட்டுவதும்  சீனமொழிப்  பள்ளிகளை  ஒழிக்க  வேண்டும்  என்ற தீய  நோக்கம்கொண்ட  கோரிக்கைகளும்  “நாட்டின்  ஒற்றுமையையும்  இணக்க  நிலையையும்  சிதறடித்து  விட்ட”தாக  அவர்  சொன்னார்.

இவ்விவகாரங்களுக்குத்  தீர்வுகாண  அரசாங்கம் உடனடி  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்றும் லியோ  கேட்டுக்  கொண்டார்.