சீனப் பள்ளிகள் தொடர்ந்து இருக்கும்: நஜிப் உத்தரவாதம்

addressசெப்டம்பர்   16 ‘சிகப்புச்  சட்டை’ப்  பேரணியில்  சீனமொழிப் பள்ளிகள்  ஒழிக்கப்பட  வேண்டும்  என்று  கோரிக்கைகள்  விடப்பட்டன  என்றாலும்  அப்பள்ளிகள்  அகற்றப்பட  மாட்டா  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  உறுதி  கூறினார்.

“அது பிஎன்னின்  கொள்கை  அல்ல”, என்று  நஜிப்  மசீச  ஆண்டுக்  கூட்டத்தில் கூறியதைப்  பேராளர்கள்  பலத்த  கரவொலியுடன்  வரவேற்றனர்.

பிஎன் பல்வகைமைக்  கொள்கைகளை  ஆதரிக்கிறது  எனப்  பிரதமர்  கூறினார்.

“இதை  நமக்காக  நம்  முன்னோர்கள்  ஏற்கனவே  தீர்மானித்து விட்டார்கள்.

“அந்த  வழியில்தான்  இதுவரை  நடந்து  வந்திருக்கிறோம். அதன்  வழியே  நிறையவும்  சாதித்துமிருக்கிறோம்”, என  மசீச  ஆண்டுக் கூட்டத்தில்  தலைமையுரை  ஆற்றியபோது  நஜிப்  கூறினார்.