முன்னாள் அம்னோ தலைவர் கைருடின் அபு ஹசானும் அவரின் வழக்குரைஞர் மத்தியாஸ் சாங்கும் பாதுகாப்புக் குற்றச் சட்ட(சோஸ்மா)த்தின்கீழ் கைது செய்யப்பட்டதற்கு பிரதமரின் பதவி “பாதுகாப்பாக இல்லை” என்பதுதான் காரணம் என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார்.
நேற்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் அமைச்சர் சாலே சைட் கெருவாக், அரசாங்கம் சோஸ்மாவின்கீழ் கைது செய்கிறது என்பதால் அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று கூறியிருந்ததற்கு எதிர்வினையாக சுவா இவ்வாறு கூறினார்.
சாலேயின் கூற்று குறித்து வினவியதற்கு, “நாம் நேற்று பிறந்த பிள்ளைகள் என்று நினைத்துக்கொண்டு பேசியிருக்கிறார்”, என சுவாக் குத்தலாக பதிலளித்தார்.
“காரணம் இருக்கத்தான் வேண்டும். காரணம் எனக்குத் தெரியும். காரணம் என்னவென்றால் பிரதமரின் பதவி பாதுகாப்பாக இல்லை அதை எண்ணிக் கவலை அடைந்திருக்கிறார்”, என நேற்றிரவு மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக நடைபெற்ற மெழுகுவத்தி ஏந்திய போராட்டத்தில் கலந்துகொண்ட சுவா செய்தியாளர்களிடம் கூறினார்.
1957ல் இருந்து எல்லாமே அடக்கு முறையில் தான் ஆட்சி– என்ன துங்கு இவ்வளவு மோசமாக நடக்க வில்லை– இவ்வளவு அப்பட்ட இன பாகு பாடு இல்லை– காரணம் துன்குவுக்கு தெரியும் 3 இனங்களும் சம உரிமை இருந்தது. இதனால் தான் சம்பந்தன் வெட்டி கட்டிக்கொண்டு பாராளும் மன்றத்திற்கு போக முடிந்தது.
“பிரதமரின் பதவி பாதுகாப்பாக இல்லை”? அப்ப தீவீரவாதிகள் பிரதமரை நெருங்கி விட்டார்களா?
இவர் போனால் அடுத்து இன்னுமோர் வும்னோ காரர் தான் வருவார்.நாராயண நாராயண …..