லிங் விவகாரத்தில் நஜிப்பின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார் வழக்குரைஞர்

lawyerமுன்னாள்  மசீச தலைவர்  லிங்  லியோங்  சிக்  மன்னிப்பு கேட்பதற்கில்லை  என்று  கூறி விட்டதால்  அவருக்கு  எதிராக  அடுத்த  கட்ட  நடவடிக்கை  மேற்கொள்ள  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  உத்தரவுக்காகக்  காத்திருப்பதாக  வழக்குரைஞர்  முகம்மட்  ஹபாரிஸாம்  ஹருன்  கூறினார்.

மன்னிப்பு  கேட்பதற்கு  லிங்குக்குக்  கொடுக்கப்பட்ட  7-நாள்  கெடு  இன்றுடன்  முடிவுக்கு  வருவதையொட்டி  ஹவாரிஸாம்  இவ்வாறு  கூறினார்.

நஜிப் பதவி  விலக  வேண்டும்  என்று  கோரிக்கை விடுத்ததற்காக  லிங்  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என  நஜிப்  அவருக்குத்  தம்  வழக்குரைஞர்  மூலமாகக்  கடிதம்  அனுப்பியிருந்தார்.

வெள்ளிக்கிழமை  வரை  அக்கடிதத்துக்கு  லிங்கின்  வழக்குரைஞர்களிடமிருந்து பதில்  வரவில்லை  எனக்  கூறப்பட்டிருந்தது.

ஆனால், லிங்கின்  வழக்குரைஞர்  ரஞ்சிட்  சிங், முன்னாள்  மசீச  தலைவரின் பதிலை  வியாழக்கிழமையே  ஹவாரிஸாம்  அலுவலகத்துக்குத்  தொலைநகல்  வழி  அனுப்பி  வைத்து  விட்டதாக  தெரிவித்தார்.