முன்னாள் அம்னோ தலைவர் கைருடின் அபு ஹாசானும் அவரின் வழக்குரைஞர் மத்தியாஸ் சாங்கும் நாட்டின் வங்கி, நிதியியல் சேவைகளைக் கீழறுப்புச் செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவ்விருவர்மீதும் குற்றவியல் சட்டம் பகுதி 124 மற்றும் பகுதி 34-இன்கீழ் கூட்டாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் செய்த போலீஸ் புகார்களின் மூலமாக அவர்கள் இக்குற்றத்தைப் புரிந்திருப்பதாகக் கூறப்பட்டது.
அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுவரை சிறைத்தண்டனை பெறலாம்.
தக்கத் திமிதா, தக்கத் திமிதா என்று மாமக்தீர் கோஷ்ட்டிக்கு வெளிப்படையாகவே தாளம் போட ஆரம்பித்து விட்டார்கள் அமீநோவின் துணைத்தலைவரும், உதவித்தலைவரும்! நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாமே என்று மாமக்தீர் நிருபித்து வருகின்றார். இனி நன்கொடை நம்பிக்கை நாயகன் போர்க்கொடியை இறக்கி இசையும் நேரம் வந்து விட்டது. எல்லாம் மாமக்தீரின் செயல்.