முன்னாள் அம்னோ தலைவர் கைருடின் அபு ஹாசானும் அவரின் வழக்குரைஞர் மத்தியாஸ் சாங்கும் இறுதிவரை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்க்கப் போவதாக சூளுரைத்தனர்.
அவ்விருவர்மீதும் இன்று கோலாலும்பூர் மெஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒன்றில் நாட்டின் வங்கி, நிதியியல் சேவைகளைக் கீழறுப்புச் செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
லாக்-அப் உடை அணிந்து புன்னகையுடன் நீதிமன்றத்துக்குள் அடியெடுத்த வைத்த அவ்விருவரும் விலங்கிடப்பட்ட கரங்களை உயர்த்திக் காண்பித்தனர்.
“இறுதிவரை நஜிப்பை எதிர்ப்போம். நஜிப்பின் கரங்களில் விலங்கு பூட்ட வைப்பேன்”, என்று கைருடின் தம் ஆதரவாளர்களிடம் கூறினார்.
இனி நீங்கள் எதிர்க்க வேண்டாம். உங்களை உள்ளே வைத்து அந்த வேலையை வெளியே உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள். உள்ளே நீங்கள் உங்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் தூக்கு மாட்டி இறந்தார்கள் என்ற செய்தியைப் படிக்க வைத்து விடாதீர்கள்.
“நஜிபின் கரங்களில் விலங்கு பூட்ட வைப்பேன்” பூ விலங்கா பொன் விலங்கா? ! இதல்லாம் நடக்காதுப்பா! அப்புறம் எதற்கு அம்னோ இளைஞர்!
உண்மையை நிலை நிறுத்த போராடுவோருக்கு ஆதரவு குரல் கொடுப்போம். இயன்றவரையில் நன்மையை செய்வோம். இறையருள் உம்மை வந்து சேரும்!!!! எதிர்பார்க்கும் அளவுக்கு ஏமாற்றத்தையும் எதிர்கொள்ள பக்குவம் வேண்டும். i