நீதிபதிகள் அரசியலமைப்புக்கு முன்னுரிமை தர வேண்டும்: கெராக்கான் வலியுறுத்து

gerசமயம்  சம்பந்தப்பட்ட  வழக்குகளில்  தீர்ப்பளிக்கும்போது  நீதிபதிகள் அரசியலமைப்புக்கு  முன்னுரிமை  கொடுப்பதில்லை  என  கெராக்கான்  கவலை  தெரிவித்தது.

“அண்மைக்  காலமாக அளிக்கப்பட்ட  நீதிமன்றத்  தீர்ப்புகள் சமய  விவகாரம்  சம்பந்தப்பட்ட வழக்குகளில் தீர்ப்பளிக்கும்போது  நீதிபதிகள்  மிகுந்த  எச்சரிக்கையுடன்  நடந்து  கொள்வதையும்  நாட்டின்  உச்ச  சட்டத்துக்கு  அதாவது  கூட்டரசு  அரசமைப்புக்கு  முன்னுரிமை  கொடுக்காமல் தீர்ப்பளிப்பதையும்  காண  முடிகிறது.

“பல  இனங்கள், சமயங்கள், பண்பாடுகள் என்று  நாடு பெருமைப்பட்டுக் கொள்கிறது.

“நீதிபதிகளில்  பெரும்பாலோர்  முஸ்லிம்கள்  என்றாலும்  அரசமைப்பின்மீது   எடுத்துக்கொண்ட  உறுதிமொழிக்கிணங்க  அவர்கள் அரசமைப்பையும்  சட்ட  ஆளுமையையும்  காக்க  வேண்டும்”,  என கெராக்கான்  இளைஞர்  துணைத்  தலைவர்  எண்டி  யோங்  இன்று  ஓர்  அறிக்கையில்  கேட்டுக்கொண்டார்.

கிளந்தானில்  ஹுடுட் சட்டத்தை  அமல்படுத்த  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  நாடாளுமன்றத்தில்  கொண்டுவந்த  தனி  உறுப்பினர்  தீர்மானத்தை  எதிர்த்து  கெராக்கான்  வழக்கு  தொடுத்துள்ளது.

அவ்வழக்கு  அக்டோபர்  20-இல் கூட்டரசு  நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வருகிறது.