நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மக்களவைத் தலைவர் தடையாக இருப்பார்

ku liபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிரான  நம்பிக்கையில்லாத்  தீர்மானத்துக்கு  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியாதான்  முதல்  தடங்கலாக  இருப்பார்  என்கிறார்  குவா  மூசாங்  எம்பி  தெங்கு  ரசாலி  ஹம்சா.

பிரதமருக்கு  எதிராக  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டுவர  எம்பிகளுக்கு  உரிமை  உண்டு. ஆனால்  பண்டிகார்  அதைத்  தடுக்கக்  கூடும்  என்றாரவர்.

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின், அம்னோ  உதவித்  தலைவர்  ஷாபி  அப்டால்,  முன்னாள்  கெடா  மந்திரி  புசார்  சனுசி  ஜூனிட்,  முன்னாள்  மசீச  தலைவர்  ஒங்  தி  கியாட்  ஆகியோர்  கலந்து  கொண்ட  செய்தியாளர்  கூட்டமொன்றில்  தெங்கு  ரசாலி  இவ்வாறு  கூறினார்.

1எம்டிபியைக் குறைகூறும்  முன்னாள்  அம்னோ  தாலிவர்  கைருடின்  அபு  ஹாசானும்   அவரின்  வழக்குரைஞர்  மத்தியாஸ்  சாங்கும்  பாதுகாப்புச்  சட்டத்தின்கீழ்  குற்றம்  சாட்டப்பட்டிருப்பதைக்  கண்டிப்பதற்காக  அச்செய்தியாளர்  கூட்டம்  கூட்டப்பட்டிருந்தது.