‘ஓராங் அஸ்லி பிள்ளைகள் காணாமல் போனது அவர்களின் பெற்றோருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை’

asli childகிளந்தான்  குவா  மூசாங்குக்கு  வருகை  மேற்கொண்ட  டிஏபி  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  இருவர்,  ஓராங்  அஸ்லி  பெற்றோருக்கு  அவர்களின்  பிள்ளைகள்  காணாமல்  போன  தகவல்  தெரிவிக்கப்படவில்லை  என்பதை  அறிந்து  அதிர்ந்து  போனார்கள்.

பிள்ளைகள்  தங்கியிருந்த  எஸ்கே  தோஹோய்  ஹாஸ்டல்  பாதுகாவலரும் மற்ற  ஓராங்  அஸ்லிகளும்  சொல்லித்தான்  பிள்ளைகள்  காணாமல்  போனது  அவர்களுக்குத்  தெரிய  வந்ததாக  பத்து  கவான்  எம்பி  கஸ்தூரி  பட்டும்  டமான்சாரா  உத்தாமா  எம்பி  இயோ  பீ  இன்னும்  தெரிவித்தனர்.

அதன்பின்  மாணவர்  தங்குவிடுதிக்குச் சென்று,  பிள்ளைகளை  அக்டோபர்  25-இலிருந்து  காணவில்லை  என்பதை  அவர்கள்  தெரிந்து  கொண்டனர்.

ஆகஸ்ட்  27-இல்  அவர்களைத்  தேடும்  முயற்சியை  மேற்கொள்ள  தேடல்  மற்றும்  மீட்புக்  குழு (எஸ்ஏஆர்)  போஸ்  தோஹோய்  வந்தது.

“இங்கு  அவசரமாக  விடை  தெரிய வேண்டிய  கேள்வி  என்னவென்றால், மோசமான  காட்டுப்பகுதியில்  உயிர்  பிழைத்திருப்பதற்கான  அடிப்படை  திறன்களோ  அதற்கான  பொருள்களோ  இல்லாமல்  அப்பிள்ளகள்   பிழைப்பது  அரிது  என்பதை  அறிந்திருந்தும்   தேடல்  நடவடிக்கையைத்  தொடங்குவதற்கு  ஏன்  நான்கு நாள்  ஆயிற்று?

“பிள்ளைகள்  காணாமல்  போனபோது  அவர்கள்  எஸ்கே தோஹோய் பராமரிப்பில்தான்  இருந்தனர். காணாமல்  போனதும்  அதை  ஏன்  அவர்களின்  பெற்றோரிடம்  தெரிவிக்கவில்லை.

“இதுவே  ஒரு  நகரில்  நடந்திருந்தால்  அதிகாரிகள்  சம்பந்தப்பட்ட  குடும்பங்களுக்குத்  தெரிவிக்க  இப்படித்தான்  பல  நாள்  காத்திருப்பார்களா?”, என்றவர்கள்  வினவினர்