கைருடினும் சாங்கும் குற்றம் சாட்டப்பட்டிருப்பது குற்றவியல் சட்டத்தின்கீழ் சோஸ்மாவின்கீழ் அல்ல

agமுன்னாள்  அம்னோ  தலைவர்  கைருடின்  அபு  ஹாசானும்  அவரின்  வழக்குரைஞர்  மத்தியாஸ்  சோங்கும்   குற்றவியல்  சட்டத்தின்கீழ்தான்  குற்றம்  சாட்டப்பட்டிருக்கிறார்கள்,  பாதுகாப்புச்  சட்ட(சோஸ்மா)த்தின்கீழ்  அல்ல  எனச்  சட்டத்துறை  தலைவர்(ஏஜி)  முகம்மட்  அபாண்டி  அலி  விளக்கினார்.

அவ்விருவரும்  சோஸ்மாவின்கீழ்  கைது  செய்யப்பட்டது  அரசாங்கம்  அதிகாரத்தைத்  தவறாக  பயன்படுத்திக்  கொண்டிருப்பதைக்  காண்பிப்பதாக  பலரும்  குறைகூறியிருப்பதை  அடுத்து ஏஜி  இந்த  விளக்கத்தை  அளித்தார்.

மேலும், சோஸ்மா என்பது ஒரு  நடைமுறைச்  சட்டம்,  அது  பயங்கரவாதிகளுக்கு  மட்டுமே  உரிய  சட்டம்  அல்ல  என்பதையும்  அவர்  தெளிவுபடுத்தினார்.

“சோஸ்மா ‘பாதுகாப்புக்  குற்றங்கள்’மீதும்  வழக்கு  தொடுக்க  இடமளிக்கிறது  என்பதைச்  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம் தெளிவுபடுத்த  விரும்புகிறது”, என  அபாண்டி  புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.